அதிமுக.. உட்கட்சி விவகாரத்தில்.. தேர்தல் ஆணையம் தலையிட அதிகாரம் இல்லை.. சிவி சண்முகம் காட்டம்

Feb 12, 2025,03:33 PM IST

சென்னை:  அதிமுக உட்கட்சி விவகாரத்தில்  தேர்தல் ஆணையமே விசாரணை செய்யலாம் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தேர்தல் ஆணையம் குமாஸ்தா வேலை மட்டுமே பார்க்க வேண்டும். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.


அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையமே விசாரிக்கலாம் என உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால்  எடப்பாடிக்கு பின்னடைவா என்பது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:




23.12.24 அன்று உங்களுடைய கருத்துக்கள் தெரிவிக்க வேண்டும் என சொல்லப்பட்டது அதை ஏற்று 23.12.2024 தேர்தல் ஆணையத்திலேயே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாங்கள் தேர்தல் ஆணையம் முன்பு ஆஜரானோம். இந்த மனு ஏற்கத்தக்கதல்ல. இவர் அதிமுக உறுப்பினர் இல்லை. 2021 நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து அதிலும் பொதுச் செயலாளரை எதிர்த்து போட்டியிட்ட அந்த நபர் அதிமுகவின் உறுப்பினர் என்ற போர்வையிலேயே கொடுக்கப்பட்டிருக்கின்ற அந்த மனு தவறானது. போலியானது. இது நிராகரிக்கப்பட வேண்டும். 


இது ஒரு கட்சியின் உட் கட்சியினுடைய பிரச்சினை. அந்த  உட்கட்சியின் பிரச்சினையில் தேர்தல் ஆணையம் தலையிட்டு விசாரணை செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என கடந்த டிசம்பர் மாதம் அதிமுக சார்பில் வாதிடப்பட்டது. ஆனால் அண்ணா திராவிடத்திற்கு தொடர்பில் இல்லாத சூரியமூர்த்தி என்பவரிடம் விசாரிப்பதாக தேர்தல் ஆணையம் கூறியது. ‌ தேர்தல் ஆணையம் தனது அதிகார வரம்பை மீறி விசாரித்ததை எதிர்த்துதான் உயர்நீதிமன்றத்தில் கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடியார் வழக்கு தொடர்ந்தார். 


நீதிமன்ற தீர்ப்புகளை தேர்தல் ஆணையம் முறைகேடாக பயன்படுத்துகிறது. இந்த மனு மீது தேர்தல் ஆணையத்திற்கு விசாரிப்பதற்கு அதிகாரம் இல்லை. விசாரிக்க கூடாது என்று நாங்கள் கூறியிருந்தோம். ஆரம்ப கட்ட விசாரணையில் சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தேர்தல் ஆணைய விசாரணைக்கு  தடை உத்தரவு கொடுக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையத்திற்கு 2 அதிகாரங்கள் தான் உள்ளன. ஒன்று மக்கள் பிரதிநிதித்துவ சட்ட அடிப்படையில் பிரிவு 15இன் படி கட்சிக்குள் பிளவு ஏற்பட்டால் ஆவணங்கள் அடிப்படையில் விசாரிக்கலாம்.இரண்டு  29 ஏ சட்டப்பிரிவின் படி கட்சியை பதிவு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு.


ஆனால் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிடும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை. இல்லாத அதிகாரத்தை இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. உட்கட்சி விவகாரம் குறித்த மனுக்களை விசாரிக்கும் முன்பு ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளதா என்பதை முடிவு செய்ய ஐகோர்ட் கூறியுள்ளது. கட்சிகளை பதிவுசெய்யும் குமாஸ்தா வேலை மட்டுமே தேர்தல் ஆணையத்தின் பணி. அதிகார வரவை மீறி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன் திடீர் ஆலோசனைக் கூட்டம்.. என்னவாக இருக்கும்..?

news

Today gold price: இதுக்கு ஒரு என்டு கார்டே இல்லையா... 1 கிராம் ரூ.10,000த்தை நெருங்கும் தங்கம் விலை!

news

அடிக்கிற வெயிலுக்கு லெமன் ஜூஸை குடிக்க நினைத்தால்.. எலுமிச்சை விலை அதிரடி உயர்வு..!

news

98 வது ஆஸ்கர் விருது விழா எப்போது நடைபெறும்..? தேதி குறிச்சாச்சு!

news

பிளாஸ்டிக் வேண்டாம்.. வேண்டவே வேண்டாமே.. கிரிஷ் சொல்லியாச்சு.. அப்ப நீங்க?.. கதையல்ல நிஜம்!

news

Today is Earth Day.. நம்மைக் காக்கும் அன்னை.. பூமியைக் காக்க விழித்துக்கொள்வோம்!

news

போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவையொட்டி.. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பு.. மத்திய அரசு!

news

Summer Rains.. தமிழ்நாட்டில்.. அடுத்த ஒரு வாரத்திற்கு வெயில் + மழை.. இதாங்க நிலவரம்..!

news

Election of new Pope: புதிய போப்பாண்டவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்?

அதிகம் பார்க்கும் செய்திகள்