சிவகாசியில் கடந்த ஆண்டு விட.. இந்த ஆண்டு பட்டாசு விற்பனை.. கடும் சரிவு.. வியாபாரிகள் அதிருப்தி!

Oct 28, 2024,12:13 PM IST

சிவகாசி: சிவகாசியில் கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு பட்டாசு விற்பனை 20 சதவிகிதம் சரிந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். அதே சமயம் சென்னை உள்பட பல்வேறு ஊர்களிலும் பட்டாசு விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.


தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்காக, அந்த ஒரு நாள் சந்தோஷத்திற்காக, சிவகாசியில் ஆண்டு முழுவதும் தொழிலாளர்கள்  பட்டாசு தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருவது வழக்கம். தீபாவளி நெருங்கும் நேரத்தில் சுமார் 2500 சில்லறை விற்பனை கடைகள் அமைக்கப்பட்டு படுஜோராக பட்டாசு விற்பனை நடைபெறுவதும் வழக்கம். அந்தக் காலகட்டத்தில் மாநிலத்தின் பிறப்பகுதிகளில் இருந்தும் சிவகாசியில் ஒன்று திரண்டு குறைந்த விலையில் மொத்தமாக பட்டாசுகளை வாங்குவர். இதனால் தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதம் இருக்கும் போதிலிருந்தே பட்டாசு விற்பனை களைகட்டும். ஆனால் தற்போது 2000-க்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்பட்டும் பட்டாசு வாங்க கூட்டம் இல்லாமல்  வெறுச்சோடி காணப்படுகின்றனவாம்.




இந்த வருடம், கடந்த ஆண்டை விட பட்டாசு விற்பனை 20 சதவிகிதம் சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. தலைநகர் டெல்லியில் தற்போது காற்றின் தரம் மிக மோசமாக நிலவி வருகிறது. இன்று காலை காற்றின் தர குறியீடு 264ஆக இருந்து வருகிறது. இனி வரும் நாட்களில் பனிக்காலம் என்பதால் பனிமூட்டம் அதிகரித்து மேலும் காற்றின் தரம் மிக மோசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி 1 வரை பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய, சேமிப்புக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. 


இதற்கு டெல்லியில் வசித்து வரும் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அம் மாநிலம் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் டெல்லியில் பட்டாசு விற்பனை கிட்டத்தட்ட ஜீரோ என்ற அளவிலேயே உள்ளது. தீபாவளி பண்டிகையின் போது தடையை மீறி பட்டாசு வெடித்தால் காற்றின் மாசு மிக மோசமடையும் எனவும் நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். டெல்லியில் நிலவி வரும் காற்றின் மாசு காரணமாக பட்டாசு விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் சிவகாசியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பட்டாசுகள் விற்பனை அடியோடு குறைந்துள்ளது.


இந்த பட்டாசு விற்பனை சரிவிற்கு இன்னொரு காரணம் .. மக்கள் பயணச் செலவைக் குறைக்கவும், குறைந்த விலையில் விதவிதமான வண்ணமயமான பட்டாசுகளை வாங்க ஆர்வம் காட்டுவதால் ஆன்லைன் ஷாப்பிங்கை விரும்புகின்றனர். இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து ஆன்லைனில் ஆர்டர் செய்கின்றனர். இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20 சதவீதம் பட்டாசு விற்பனை சரிந்துள்ளதாக பட்டாசு வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆன்லைனில் பட்டாசுகளை விற்று வருவதால் ஆன்லைன் பட்டாசு விற்பனையை முறைப்படுத்த சிவகாசி பட்டாசு வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 


சென்னை தீவுத் திடலில் விற்பனை தொடக்கம்


மறுபுறம் தீபாவளி பண்டிகை வருவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் சென்னை தீவு திடலில் பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ளது. ஒரே இடத்தில் 50 கடைகள் அமைக்கப்பட்டு சில்லறை விலையிலும் மொத்த விலையிலும் குறைந்த விலையில் பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதிலும் இந்த ஆண்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவரக்கூடிய வகையில் ஈமு கோழி பட்டாசு, ஆட்டோகிராப் பட்டாசு, மைக் வடிவ பட்டாசு, செல்பி ஸ்டிக் பட்டாசு, ரிமோட் கார் பட்டாசு ஆகிய விதவிதமான பட்டாசுகள் புதுவரவாக வந்துள்ளதால் மக்கள் இதனை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். 


இதுதவிர அங்கு ரூபாய் 850 முதல் 3200 வரையும் கிப்ட் பாக்ஸ்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் திரளாக வந்து பட்டாசுகளை வாங்கி சென்றனர். இன்று முதல் பட்டாசு விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று நம்பப்பபடுகிறது. பிற ஊர்களிலும் கூட பட்டாசு விற்பனை மெல்ல மெல்ல சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்