சென்னை: லோக்சபா தேர்தலுக்கான திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளதாக திமுக அறிவித்துள்ளது. அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தை முடித்து வருகின்றன. தொகுதி பங்கீடு செய்வதில் திமுகவும் தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது.
தற்போது இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் திமுக இறுதி உடன்பாடு மேற்கொண்டுளஅளது. இன்று திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த மூன்றாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தின்போது இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா இரண்டு சீட் உடன்பாடு ஏற்பட்டு அதுதொடர்பான ஒப்பந்தத்தில் மார்க்சிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் ஆகியோரும், திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கையெழுத்திட்டனர்.
இதுவரை திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் 2 , மார்க்சிஸ்ட் 2, முஸ்லிம் லீக் 1, கொமதேக 1 என மொத்தம் 6 தொகுதிகளுக்கு உடன்பாடு முடிவடைந்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கடசிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.
இதுகுறித்து பின்னர் முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், எத்தனை தொகுதி என்பதை காட்டிலும் நாட்டின் நலனே முக்கியம். திமுக கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை. எந்த சிக்கலையும் யாரும் ஏற்படுத்த முடியாது. கடந்த தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்றார்.
மார்க்சிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற கோவை மற்றும் மதுரை தொகுதிகளை மீண்டும் கேட்டுள்ளோம். எந்தத் தொகுதியில் போட்டி என்பது ஆலோசித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று கூறினார்.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}