பசுக் காப்பாளர்களால் உயிரை விட்ட பிளஸ் டூ மாணவர்.. 30 கி.மீ. தூரம் விரட்டிச் சென்று சுட்டுக் கொலை!

Sep 03, 2024,10:20 AM IST

டெல்லி: பசுக் காப்பாளர்கள் என்ற போர்வையில் இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிக அளவில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இதே பசுக் காப்பாளர்களால் இந்து சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே விரட்டி விரட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வட மாநிலங்களில் பசுக் காப்பாளர்கள் என்ற பெயரில் பலர் இயங்கி வருகின்றனர். பசுக்களை இறைச்சிக்காக கொண்டு செல்வதைத் தடுப்பதே இவர்களது  வேலை. இவர்களிடம் சிக்கி பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலும் இவர்கள் இஸ்லாமியர்களாகவே இருப்பார்கள். இந்த நிலையில் பசுக் காப்பாளர்களிடம் சிக்கி ஒரு இந்து இளைஞர் உயிரிழந்துள்ளார்.




ஹரியானாவின் பரீதாபாத் மாவட்டத்தில் பிளஸ்டூ மாணவரான ஆர்யன் மிஸ்ரா என்பவர் அநியாயமாக உயிரிழந்துள்ளார்.  ஆர்யன் மிஸ்ராவும், அவரது நண்பர்கள் சாங்கி மற்றும் ஹர்ஷித் ஆகியோர்  காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் அவர்களை துரத்தி வந்தது. காரை மடக்கிய அந்தக் கும்பல், ஆர்யன் மற்றும் நண்பர்களிடம் காரை நிறுத்துமாறு கூறியது. ஆனால்  ஏற்கனவே சிலருடன் பிரச்சினை இருந்ததால் அவர்கள்தான் ஆளை அனுப்பி தாக்க முயல்வதாக கருதிய ஆர்யன் மற்றும் நண்பர்கள் காரை நிறுத்தாமல் சென்றனர்.


இதையடுத்து அந்தக் கும்பல், ஆர்யன் நண்பர்களின் காரை துரத்திச் சென்றது. கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த சேசிங் நடந்துள்ளது.  ஒரு இடத்தில் வைத்து ஆர்யனின் காரை மடக்கிய கும்பல், சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளது. இதில் ஆர்யன் கழுத்தில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். காருக்குள் இரண்டு பெண்களும் இருந்துள்ளனர். அதன் பின்னர் அந்தக் கும்பல் தப்பி ஓடி விட்டது.


போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து காரைத் துரத்திச் சென்று தாக்குதல் நடத்திய அனில் கெளசிக், வருண், கிருஷ்ணா, ஆதேஷ், செளரப் ஆகியோரைக் கைது செய்தனர். விசாரணையின்போது, ஆர்யன் மற்றும் அவரது நண்பர்கள் பசு மாட்டுக் கறியைக் கடத்திச் செல்வதாக தகவல் கிடைத்து அதன் பேரில்தான் துரத்தினோம். அவர்கள் நிற்காமல் போனதால் உண்மையிலேயே அவர்கள் கடத்துவதாக நினைத்து துரத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டோம். ஆனால் காரில் பெண்கள் இருந்ததால் தவறான நபரைத் துரத்தி விட்டதாக அறிந்து ஓடி விட்டோம் என்று கூறியுள்ளனர்.


இந்தக் கும்பல் பயன்படுத்திய துப்பாக்கிகள் கள்ளத் துப்பாக்கிகளாகும். அனைத்தும் மேற்கு வங்கத்தில் வாங்கப்பட்டவை என்று தெரிய வந்துள்ளது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


சமீபத்தில் இதேபோலத்தான் மத்தியப் பிரதேசத்தில் ரயிலில் ஆட்டுக்கறி கொண்டு சென்ற இஸ்லாமிய இளைஞரை ஒரு கும்பல் மோசமான முறையில் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது நினைவிருக்கலாம். இந்த சம்பவத்தை வைத்து மத துவேஷத்தைப் பரப்ப வேண்டாம் என்று அந்த பெரியவர் பெருந்தன்மையுடன் கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்