மாடு முட்டி குழந்தை படுகாயம்.. "சாலையில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்துங்கள்"

Aug 10, 2023,01:03 PM IST
சென்னை: சென்னையில் தெருவில் சென்ற பள்ளிச் சிறுமியை மாடு முட்டியதில் அவர் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து பாமக தலைவர் டாக்டர் அன்புமமணி ராமதாஸ் அதிர்ச்சியும், வருத்தமும் வெளியிட்டுள்ளார்

சென்னையில் கால்நடைகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை மக்களை அதிர வைத்த வீடியோ காட்சி அது. அரும்பாக்கம் பகுதியில் ஒரு தாய் தனது பிள்ளைகளோடு பள்ளிக் கூடத்திலிருந்து திரும்பிக் கொண்டுள்ளார். தாய்க்கு முன்னால் அவரது மகள் செல்கிறார். அருகே மாடுகள் சென்று கொண்டுள்ளன. அப்போது திடீரென ஒரு பசு மாடு  அந்த சிறுமியின் பக்கம் வேகமாக திரும்புகிறது. திரும்பிய வேகத்தில் அந்த சிறுமியை முட்டி கீழே தள்ளி விடுகிறது. அதைத் தொடர்ந்து சிறுமியை விடாமல் முட்டியபடி இருக்கிறது. தூக்கிப் போட எத்தனிக்கிறது. ஆனால் சிறுமி தரையோடு படுத்துக் கொண்டதால் மாட்டின் முயற்சி பலிக்கவில்லை. இருந்தாலும் சிறுமியை அது விடாமல் முட்டியபடி இருக்கிறது.



அக்கம்பக்கத்தினர் கூடி மாட்டின் மீது கற்களை எரிந்து விரட்ட முயற்சித்தும் முடியவில்லை. சிறிது நேர போராட்டத்துக்குப் பின்னர் மாட்டை விரட்டி சிறுமியை மக்கள் மீட்டனர். அதிர்ஷ்டவசமாக சிறுமிக்கு பெரிய அளவில் காயமில்லை. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து டாக்டர் அன்புமணி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அரும்பாக்கம் சி.எம்.டி.ஏ. பகுதியில் சாலையில் கட்டுப்பாடின்றி திரிந்த பசு மாடு, அவ்வழியே சென்ற பள்ளிக் குழந்தையை  முட்டித் தூக்கி வீசியதில் அந்தக் குழந்தை படுகாயமடைந்து மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறாள்.  பள்ளி சென்று திரும்பிய  குழந்தை  வீட்டுக்கு செல்வதற்கு பதிலாக மருத்துவமனைக்கு சென்றிருப்பது வேதனையளிக்கிறது. காயமடைந்த குழந்தை  விரைவில் முழு நலம் பெற்று வீடு திரும்ப எனது விருப்பங்களைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.

பள்ளிக்குழந்தை  முட்டித் தூக்கி வீசப்பட்டது மட்டுமின்றி, சாலை விபத்துகளுக்கும் கால்நடைகள் காரணமாக உள்ளன. சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும், அதிக போக்குவரத்து நிகழும் கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையிலும்  கால்நடைகள்  திடீரென சாலைகளுக்குள் நுழைவதால் அதிக விபத்துகள் நடக்கின்றன; அதனால் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இவை தடுக்கப்பட வேண்டும்.

சென்னை மாநகர எல்லைக்குள் கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கால்நடைகளைக் கட்டுப்படுத்த  எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாதது தான் இதற்கு காரணம். சென்னை மாநகரில் கால்நடை வளர்ப்பை சட்டத்தின் வழியாக மட்டுமே பார்க்க முடியாது.  கால்நடைகள் சென்னையின் பூர்வகுடி மக்களின் வாழ்வாதாரம் சார்ந்தவை என்பதால், அந்தக் கோணத்திலும் தான்  பார்க்க வேண்டியுள்ளது.  அதேநேரத்தில் கால்நடைகளால் மக்களுக்கு எந்த பாதிப்பும்  ஏற்படுவதை அனுமதிக்க முடியாது.

பொதுமக்களின் குறிப்பாக குழந்தைகளின்  பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சென்னையில் கால்நடைகளின் நடமாட்டத்தை  கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சியும், காவல்துறையும்  நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு  தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை  தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி

news

வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?

news

வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

news

Priyanka Gandhi.. வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி அதிரடி.. அண்ணன் சாதனையை முறியடித்த தங்கை!

news

14 மாநிலங்கள்.. 48 சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல்.. பாஜக 18, காங்கிரஸ் 8, திரினமூலுக்கு 6!

news

மகாராஷ்டிரா வெற்றி.. வரிந்து கட்டிக்கொண்டு பட்டாசு வெடித்த தமிழிசை.. அடுத்து சொன்ன அதிரடி வார்த்தை!

news

Wayanad by poll resutls.. அபார வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி.. 3.20 லட்சம் வாக்குகள் வித்தியாசம்!

news

Maharashtra poll results: உத்தவ், சரத் பவாருக்கு கெட் அவுட் சொன்ன ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார்!

news

Wayanad: வயநாட்டில் கொடி நாட்டிய பிரியங்கா காந்தி.. 4வது தலைமுறையிலிருந்து மேலும் ஒரு எம்.பி

அதிகம் பார்க்கும் செய்திகள்