தென்காசி: மேற்குத் தொடர்ச்சி பகுதிகளில் தொடர் மழை காரணமாக குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மூன்றாவது நாளாக குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழையால் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான கோவை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், நேற்று கனமழை வெளுத்து வாங்கி வங்கியது. கனமழை பெய்வதால் உதகை செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அதேபோல் மலைச்சரிவில் ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது.
அவலாஞ்சி, அப்பர் பவானி, முக்குருத்தி, எமரால்டு, போன்ற நீர் பிடிப்பு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. அவலாஞ்சியில் இடைவிடாத கனமழையால் அங்குள்ள சுற்றுச்சூழல் மையம் இரண்டு நாட்கள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. இது தவிர அவலாஞ்சிக்கு சுற்றுலாப் பயணிகள் வரவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை:
கோவை மாவட்டம் சூலூர், பொள்ளாச்சி, வால்பாறை, நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. வால்பாறை செங்கோனாவில் அதிகபட்சமாக 12 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.தொடர் கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியாளர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக நல்ல மழை பெய்தது. இதற்கிடையே மத்திய வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் வரும் 21 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
குற்றாலத்தில் வெள்ளம்:
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் குற்றால நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக குற்றாலம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா
14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை
தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!
400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!
தமிழகத்தில்.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!
விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!
குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!