சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பேஸ்புக் பக்கத்தில் அவதூறாக பதிவிட்ட வழக்கில் நடிகர் - அரசியல்வாதி எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை, ரூ.15000 அபராதம் விதித்து சென்னை சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பு வழங்கயுள்ளது.
அவர் மேல் முறையீடு செய்ய வசதியாக தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பைத் தொடர்ந்து தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை எஸ்.வி.சேகர் கட்டி விட்டார்.
நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர், கடந்த 2018ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துக்கள் கொண்ட பதிவை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதற்கு நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் செயலாளர் மிதார் மொய்தின் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார். அப்போது பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்தார். ஆனால் எஸ்.வி.சேகர் வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு குறித்து 2019 ஆம் ஆண்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை, ரூ.15000 அபராதம் விதித்து சென்னை சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர்நீதமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளதாக அவர் தெரிவித்ததை அடுத்து சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை மட்டும் செலுத்தினார்.
Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!
தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!
நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்
தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!
தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது?.. 11 ஆம் தேதி அன்று தெரியும்!
எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்
தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!
{{comments.comment}}