சிங்கப்பூர்: உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கி சற்று ஓய்ந்த கொரோனா தற்பொழுது சிங்கப்பூரில் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதனால் லாக்டவுன் போடப்படுமா என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
வல்லரசு நாடுகள் முதல் வளரும் நாடுகள் வரை அனைத்து நாட்டினர்களுக்கும் மரண பயத்தை காண்பித்து சென்றது தான் கொரோனா. முதன் முதலில் 2019ம் ஆண்டு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் ஏராளம். ஒட்டுமொத்த நாடுகளையும் லாக்டவுன் போட்டு பூட்டி வைத்த காட்சியை உலகம் அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது.
கொரோனா பரவல் மற்றும் பல மாதங்கள் நீடித்த லாக்டவுன்களால், உலக நாடுகளின் பொருளாதார நிலை சரிந்தது. ஓவ்வொரு நாடும் தனித்தீவு போலாகின. பல கஷ்டங்களை ஏற்படுத்திய கொரோனா ஓரளவிற்கு குறைந்து அனைத்து நாடுகளும் இயல்பு நிலைக்கு திரும்பியது. அவ்வப்போது ஆங்காங்கே அச்சம் காண்பித்து வந்த கொரோனா தற்பொழுது சிங்கப்பூரில் வேகமாக அதிகரித்து வருகிறது.
இது தொடர்பாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 2ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 32,035 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டு பதிவான அதிகளவு பாதிப்பு. இதற்கு முன் கடந்த மார்ச் மாதம் அதிகபட்சமாக ஒரு வாரத்துக்கு 28,410 பேர் பாதிக்கப்பட்டனர். தீவிர கிசிச்சை தேவைப்படும் கொரோனா நொயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன என்று தெரிவித்திருந்தது.
மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தவும், வெளியே போகும்போது கட்டாயம் முகமூடி அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும், அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் தீவிரமாக கொரோனா பரவி வருவதால் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சிங்கப்பூர் அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருவதால் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டும், முகமூடிகளை அணிந்தும் வருகின்றனர். கொரோனா அதிகரிப்பின் காரணமாக ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டாலும் படலாம் என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தற்போது பரவி வரும் கொரோனா பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன் குறிப்பிட்ட காலத்திற்கு அந்த வைரஸ்கள் மனிதனின் உடலில் தங்கி மேலும், பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்
Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?
மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்
TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!
AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!
Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
Govt Holidays 2025: ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை.. எந்த மாதத்தில் அதிக லீவு?
{{comments.comment}}