ஆஹா... கூல் சுரேஷையே கொந்தளிக்க வச்சுட்டாங்களே. என்னாகப் போகுதோ!

Oct 18, 2023,05:00 PM IST

 - மீனா


சென்னை:  பிக் பாஸ் வீட்டில் அவர் பாட்டுக்கு ஜாலியா நடமாடிட்டிருக்கார்.. அவரையே கொந்தளிக்க வச்சுட்டாங்க இன்னிக்கு.. யாரைச் சொல்றீங்க.. அட, நம்ம கூல் சுரேஷைத்தான்.


விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் இன்றைய முதல் புரமோவில் ஒரு பரபரப்பான காட்சி அரங்கேறியது. அந்தக் காட்சியில் மொத்தப் பேரும் சேர்ந்து கூல் சுரேஷ் பக்கம் கையைக் காட்டி கடுகடுப்பை ஏற்ற, கொந்தளித்துப் போனார் சுரேஷ்.




மேட்டர் என்ன தெரியுமா.. இதோ இதுதான்!


பிக் பாஸ் இடம் இருந்து வந்த ஒரு அறிக்கையை ரவீனா வாசிக்கிறார். அப்போது, "ஒரு சாபக்கல். இது யாரை சென்று சேருகிறதோ அவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டு, அடுத்த வாரம் நேரடியாக நாமினேஷன் செய்யப்படுவார்". என்று ரவீனா வாசித்து முடித்தவுடன் "பயங்கரமான சாபமாக இருக்கே" என்று சரவணன் கூறுகிறார்.. அத்தோடு விட்டாங்களா.. அடுத்தடுத்து ஒவ்வொருவரும் சொல்லி வச்ச மாதிரி அத்தனைப் பேரும்.. (நம்ம விச்சு அக்கா கூடத்தான்) கூல் சுரேஷ், கூல் சுரேஷ் அண்ணா , கூல் என்று ஒவ்வொருத்தருமே கூல் சுரேஷைக் கையைக் காட்ட "தலைவன்" பொங்கிட்டாப்டி!


கோபமக, "நான் சீரியஸாகத்தான் கேட்கிறேன். உங்களுக்கு ஒரு இளிச்சவாயன் வேணும். அதற்கு நீங்க என்னை தேர்வு செய்வீங்க. ஏமாந்த ஆள் என்ன மட்டும் வச்சு செய்யுங்கப்பா. நானே  கல்லை எடுத்துக்கிறேன்" என்று ஆத்திரமடைந்து கூல் சுரேஷ் சொல்லும் போது மற்றவர்கள் சொல்ல வருவதை கேட்காமல் , மேலும் கோபமடைந்து கத்துவதோடு இந்த பிரமோ முடிகிறது.


இப்படி அனைத்து போட்டியாளர்களும் தனக்கு எதிராக இருப்பதை  அறிந்து கொண்ட கூல் சுரேஷின்  அடுத்த கட்டநடவடிக்கை எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கணும்.. ஆமா.. கூல் ஜாலியாத்தானே இருந்தார்.. இன்னிக்கு ஏன் இப்படி கொந்தளிச்சு குமுறிட்டாரு.. ஒரு வேளை கூல்.. ஹாட்டாகப் போகுதோ!


நமக்கெல்லாம் இதைப் பாக்கிறப்ப ஜாலியாத்தாம்ப்பா இருக்கு!


சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்