அதே பீன்ஸ்தான்.. அட பொரியலும் அதேதான்.. ஆனா இது விஜய் சேதுபதி ஸ்டைலுங்க.. செஞ்சு பாருங்க!

Jul 02, 2024,03:28 PM IST

உங்கள் வீட்டில் தினமும் ஒரே மாதிரியான பொரியல் செய்து போர் அடிக்குதா.. சாம்பார் என்றால் அதற்கு காம்பினேஷன் பீன்ஸ்  கேரட் பொரியல் தான். பருப்பு என்றால் அதற்கும்  பீன்ஸ் கேரட் பொரியல் தான். இப்படியே சாப்பிட்டு சாப்பிட்டு அலுத்து போச்சா..  அப்ப குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி சொன்ன மாதிரியே  பீன்ஸ் பொரியல் செய்து பாருங்கள். நாங்கெல்லாம் செஞ்சு பார்த்து சாப்பிட்டுட்டோம்.. டேஸ்ட் மிகவும் அற்புதமா இருக்கு. நீங்களும் அதே போல ட்ரை பண்ணி பாருங்க.


பீன்ஸ் பொரியல் செய்ய தேவையான பொருட்கள்: 




பீன்ஸ் -கால் கிலோ

வெங்காயம்-2

மிளகாய் வத்தல்- 3

வறுத்த நிலக்கடலை-சிறிதளவு 

தேங்காய்-ஒரு பல் 

கடுகு, உளுந்தம் பருப்பு- சிறிதளவு 

எண்ணெய்- தேவையான அளவு


முதலில் பீன்ஸ் காயை பொடியாக அரிந்து கொண்டு வேக வைத்துக் கொள்ளவும். மற்றொருபுறம் மிக்ஸியில் தேங்காய், நிலக்கடலை பருப்பு, வத்தல், போன்றவற்றை போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் வாணலியில் கடாயை வைத்து எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட வேண்டும்.


வெங்காயம் பொன்னிறமாக மாறிய பிறகு வேக வைத்த பீன்ஸ்காய்,  உப்பு மஞ்சள் தூள், போட்டு நன்றாக கிளறவும். பின்னர் அரைத்து வைத்த மசாலா கலவையை அதனுடன் சேர்ந்து நன்றாக கிளறி ஐந்து நிமிடம் ஆனதும் இறக்கவும். ஆரோக்கியமான வித்தியாசமான பீன்ஸ் காய் பொரியல் தயார். சாப்பிட்டு பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க..!


பீன்ஸ் காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:


இயற்கையாகவே நார்ச்சத்து மிகுந்த காய் என்றால் அது பீன்ஸ் காய் தான். இதனால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். எலும்பு அடர்த்தியை அதிகப்படுத்தும். இதில் வைட்டமின் பி6, தையமின், வைட்டமின் சி, ஆகிய சத்துக்கள் இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. குறிப்பாக பீன்ஸ் விதை சிறுநீரக வடிவிலேயே உள்ளதால், இது சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தி சிறுநீர் கற்களை அகற்ற பேருதவி புரிகிறது.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்