Cooking Tips: ஆட்டு ஈரல் கிரேவி.. டேஸ்ட் மட்டுமில்லை.. ஹெல்த்தியானதும் கூட!

Mar 04, 2025,01:30 PM IST

- தேவி


காலிங் பெல் இசைத்ததைக் கேட்டு போய்க் கதவைத் திறந்தாள் பவித்ரா.. வெளியே நின்றிருந்தது அமுதா.


"அடடே என்னடா இது சர்ப்பிரைஸ்.. வா அமுதா.. என்ன ஆளவே காணோம்,ரொம்ப நாளாச்சு"


"ஆமா பவி, வேலை அதிக இருந்துச்சு. கொஞ்சம்  பிசி. அதான் வர முடியல சரி, நீ என்ன பண்ணிட்டு இருக்கிற"


"நானா.. கிச்சன்ல கொஞ்சம் பிசியா இருக்கேன்"


"எப்பப் பார்த்தாலும் கிச்சன்தானா.. என்ன ஸ்பெஷல் இன்னிக்கு.."


"எங்க வீட்டுல எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் ஆட்டு ஈரல் கிரேவி பண்ணிட்டு இருக்கேன்"


"கிரேவியா.. இது எப்படி பண்ணுறது.. எனக்கு இது பண்ண தெரியாதே"


"சரி வா நான் சொல்லி தரேன், நீயும் தெரிஞ்சுக்கோ. ஈரல் பொரியல் உடம்புக்கு ரொம்ப நல்லது. அதாவது ரத்த சோகை இருக்கிறவங்களுக்கு இது ரொம்ப நல்லது. நீ என்னை அடிக்கடி கேப்பியே.. நீ எப்படி இவ்ளா பிரைட்டா இருக்கிறேனு.. அதோட ரகசியம் இதுதான் .. அதாவது உடம்புல ரத்தத்தோட அளவு கரெக்டா இருந்தா முகம் எப்பவுமே பிரகாசமா இருக்கும் அப்படின்னு சொல்லுவாங்க. இந்த ஈரல் வந்து, நம்மளுடைய சிவப்பு அணுக்களை அதிகரிக்க உதவும். ஹீமோகுளோபின் அளவு நமக்கு முக்கியம். அதி சரியான அளவில் இருந்தால்தான் உடம்புக்கு ஆரோக்கியம். 


வாரத்துக்கு ஒரு தடவை இல்லன்னா ரெண்டு தடவையாது இந்த பொரியலை  செஞ்சு சாப்பிடுறது மூலமா முகமும் பளிச்சுன்னு இருக்கும். உடம்பும் ஆரோக்கியமா இருக்கும்.  சரி.. இதை எப்படி பண்றதுன்னு உனக்கு சொல்லிக் கொடுக்கிறேன்.. கேட்டுக்கோ.. முதல்ல தேவையான பொருட்களைப் பார்ப்போம்"




தேவையான பொருட்கள்


ஈரல்- கால் கிலோ 

கடலைப்பருப்பு -50 கிராம்

தேங்காய் -2 சில்லு

பூண்டு- 5 

சின்ன வெங்காயம் - 10

கரம் மசாலா பொடி மிளகாய் பொடி 

உப்பு (தேவையான அளவு) 


"ஓகே பவி.. எல்லாம் எடுத்தாச்சு.. நெக்ஸ்ட் என்ன"


"ஈரல் பொரியல் வந்து பண்றது ரொம்ப ஈஸி.  முதல்ல 50 கிராம் கடலைப்பருப்பு ஊற போடணும், அதுக்கப்புறம் இதுக்கு வந்து கொஞ்சம் மசாலா ரெடி பண்ணனும். தேங்காய், வெங்காயம்  பூண்டு இது மூணையும் மிக்ஸி ஜார்ல போட்டு  அரைச்சி தனியா எடுத்து வச்சுக்கலாம். இப்ப ஒரு குக்கரை எடுத்துட்டு குக்கர்ல கொஞ்சம் எண்ணெய் அதுக்கப்புறம், ஈரலை நல்லா கழுவி  அதைப் போடணும்.  ஈரலை ரொம்ப சின்னதா வெட்ட வேண்டாம்.. ஓரளவுக்கு பெருசாவே போட்டுக்கலாம். ஏன்னா வேக வேக ஈரல் அளவு சிறுசாகும். சோ, அப்படியே ஈரலை போட்டுக்கலாம்.


தனியா ஊற வச்சிருந்த கடலைப்பருப்பையும் இதுல போட்டுட்டு, இந்த கடலைப்பருப்பையும் ஈரலையும் ஒரு நாலுல இருந்து ஒரு அஞ்சு விசில் வர வரைக்கும் வேக வச்சு தனியா எடுத்து வச்சுக்கலாம். இப்ப அடுத்து என்ன பண்றோம்னா தனியா ஒரு வடை சட்டியை அடுப்புல  வச்சிட்டு அதுல எண்ணெய் ஊத்தி கறிவேப்பிலை கடுகு எல்லாம் போட்டு, தனியா வேக வச்ச ஈரலையும் கடலைப்பருப்பையும் போட்டு, தனியா அரைச்சு வச்சிருந்த  மசாலாவையும் ஊத்திட்டு, தேவையான அளவு உப்பையும் கொஞ்சம் கரம் மசாலா பொடியும் போட்டு, ஒரு பத்து நிமிஷம் அப்படியே நல்லா தண்ணில வேக விடறோம். 


தண்ணி நல்லா வத்தினதுக்கு அப்புறம் இறக்க வேண்டியதுதான். சூடான ஆட்டு ஈரல் கிரேவி ரெடி.. வாசமே ஆளைத் தூக்கும். சாப்பிட்டா சாப்பிட்டுட்டே இருக்கணும் போல இருக்கும்.


"சூப்பர் பவி.. இந்த வாரம் எங்க வீட்டுல இதுதான்.. பண்ணி எல்லோரையும் அசத்திடறேன்"


"அசத்து அசத்து.. ஈரல் சாப்பிடுவதால் ரத்த விருத்தி மட்டுமில்லை, தலைமுடி சம்பந்தமான பிரச்சினைகள் கூட தீருதாம். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்னு  சொல்றாங்க. வாரத்துக்கு 2 நாள் அல்லது ஒரு தடவையாவது செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க. ரொம்ப நல்லது"


"கண்டிப்பா பவி.. சரி அதை விட.. முதல்ல செஞ்சதை எடுத்து தட்டுல போடு.. ஒரு பிடி பிடிக்கலாம்"


"உனக்கு இல்லாததா.. உக்காரு.. பிளேட்ல போட்டு எடுத்துட்டு வர்றேன்"


என்னங்க.. அவங்கெல்லாம் சாப்பிடப் போறாங்க.. நீங்களும் இந்த வாரம் வச்சு சாப்பிட்டுப் பார்த்துட்டு கருத்துக்களைச் சொல்லுங்க எங்களுக்கும்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மத்திய அரசு மீதான விமர்சனத்தை மறைக்கக் கூட பெரியார்தான் உதவுகிறார்.. விஜய் பலே அறிக்கை!

news

எல்லாமே பொய்.. மோகன்பாபு மீதான புகார்களை முற்றாக நிராகரிக்கிறேன்.. செளந்தர்யா கணவர் விளக்கம்!

news

செளந்தர்யா விபத்தில் மரணிக்கவில்லையா.. கொலை செய்யப்பட்டாரா?.. புதிய புகாரால் திடீர் பரபரப்பு

news

வத்தலகுண்டு அருகே அமையவிருந்த டோல்கேட்... அடித்து நொறுக்கிய பொதுமக்கள்!

news

நிறைய மொழிகள் கத்துக்கலாம்.. தப்பில்லை.. எனக்கு 8 மொழிகள் பேசத் தெரியும்.. சொல்கிறார் சுதா மூர்த்தி

news

புதுச்சேரி முதல்வரின் சூப்பர் அறிவிப்பு.. மகளிர் உதவித் தொகை ரூ.1000ல் இருந்து ரூ.2500 ஆக உயர்வு!

news

கார் வாங்க போறீங்களா.. பார்க்கிங் செய்ய இடம் இருக்கா?.. சென்னையில் போக்குவரத்து ஆணையம் அதிரடி!

news

என் கணவர் படத்திற்கு மட்டும்.. ஏன் இவ்வளவு கடுமையான விமர்சனம்.. நடிகை ஜோதிகா ஆதங்கம்!

news

குளுகுளு வானிலை.. தமிழ்நாட்டில் கனமழைக்கும், மிதமான மழைக்கும் வாய்ப்பு..!

அதிகம் பார்க்கும் செய்திகள்