சென்னை: வணக்கம் மக்களே.. ராமர் சிலையை சூப்பரா நிறுவிட்டாங்க.. நாடே விழாக்கோலத்துல இருக்கு.. எல்லோரும் மகிழ்ச்சியா இருக்காங்க.. எல்லாம் நல்லபடியா நடந்தா சரித்தான்.. சரி, இன்னிக்கி ஈசி குக்கிங்ல நான் உங்களுக்கு சொல்ல போறது என்ன தெரியுமா ? வாங்க பார்க்கலாம்.
சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த சௌசௌ சட்னி பத்திதாங்க இன்னிக்கு சொல்லப் போறேன்.. என்னாது.. சௌசௌல சட்னியா, அது எப்படிங்க நல்லா இருக்குமானு தானே நினைக்கிறீங்க, ரொம்ப நல்லா இருக்குங்க. முதல்ல "செள செள"ல இருக்கிற சத்துக்களை சொல்றேன் கேட்டுக்கோங்க ஃபிரண்ட்ஸ்.
செள செள காயில், நீர்ச்சத்தும் கால்சியம் சத்தும் நிறைந்து இருக்கிறதால, எலும்புகளுக்கு மிகவும் நல்லதுங்க. வளரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் இந்த சௌசௌ, ரத்த அழுத்தத்தை சீராக வைக்கவும் உதவுதுங்க. இது மாதிரி நிறைய சொல்லிட்டே போகலாம். இப்ப வாங்க சட்னிக்குப் போய்ருவோம் சட்டுப்புட்டென்று!
செள செள சட்னியை எப்படி செய்யணும்.. என்னென்ன பொருட்கள் தேவைன்னு சொல்றேன்.. நோட் பண்ணிக்கோங்க.
தேவையான பொருட்கள்:
செள - செள - 1 (பெரியது)
சின்ன வெங்காயம் - 15
காய்ந்த மிளகாய் - 4
மிளகு - 1 ஸ்பூன்
பூண்டு - 6 பல்
தக்காளி - 2
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
வெள்ளை உளுந்து- 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி -சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
முதலில் அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் வெள்ளை உளுந்து, மிளகு, வர மிளகாய் போட்டு வதக்கவும். பிறகு சிறு துண்டுகளாக நறுக்கிய சௌசௌ சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கவும்.
பாதி வதங்கியவுடன் நறுக்கிய தக்காளி தேங்காய் துருவல், புளி சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின் அடுப்பில் இருந்து இறக்கி, ஆறியவுடன் தேவையான உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அவ்வளவுதாங்க, சுவையான சௌசௌ சட்னி ரெடிங்க.
காய்கறி சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு கூட இந்த சட்னியை வைத்து இட்லியோ, தோசையோ செஞ்சு கொடுங்க. விரும்பி சாப்பிடுவாங்க. டெய்லி என்ன சட்னி அரைப்பது என்று யோசிக்காமல் வித்தியாசமான இந்த சட்னி செஞ்சு அசத்துங்க ஃபிரண்ட்ஸ்.
ஓகேங்க.. மறுபடியும் இன்னொரு ரெசிபியோட வரேன்.. till then, bye bye!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
{{comments.comment}}