சுள்ளுன்னு வெயிலு.. '"குளு குளு" பாதாம் பிசின் மில்க் ஷேக் செஞ்சு.. ஜில்லுன்னு குடிக்கலாமா!

Feb 09, 2024,12:34 PM IST

சென்னை: வணக்கங்க.. என்னங்க, இன்னைக்கு தை அமாவாசை பூஜை எல்லாம் முடிச்சு சாமி எல்லாம் கும்பிட்டாச்சா? இந்த மாதிரி முக்கிய விரத நாட்கள்ல, நாம் வடை பாயாசத்துடன் சாப்பாடு ரெடி பண்ணுவோம், இல்லையா.. இப்போ இருக்கிற பிள்ளைகளுக்கு பாயாசம் எல்லாம் பிடிக்கிறது இல்லைங்க. 


ஏதாவது டெசர்ட் தான் சாப்பிடணும், செஞ்சுதாங்கன்னு சொல்லிட்டு இருப்பாங்க. இனி நீங்க வீட்டிலேயே டெசர்ட் ரெசிபி செய்யலாங்க. நம்ம வீட்ல உள்ள பொருட்களை வைத்தே குறைந்த செலவில் சுவையா செய்யலாம். என்ன டெஸர்ட்னு சொல்றேங்க மக்களே.. பாதாம் பிசின் டெசர்ட் அல்லது மில்க் ஷேக்ன்னு சொல்லலாம்.




நடிகை அசின் தெரியும்.. அது என்ன.. பாதாம் பிசின்.. அப்படின்னு நிறையப் பேர் கேட்பீங்க.. அது என்னன்னு தெரியாதவங்களுக்கு சொல்றேங்க. நம்ம ஜிகர்தண்டா வாங்கி குடிப்போம்ல. அதுல ஜெல்லி மாதிரி கலந்து இருப்பாங்கள்ள தோழிகளே, அதுதாங்க பாதாம் பிசின். முன்னெல்லாம் நாட்டு மருந்து கடைகள்ல மட்டுமே கிடைக்கும் இந்த மருத்துவ குணமிக்க பாதம் பிசின் இப்ப எல்லா சூப்பர் மார்க்கெட்லயும் கிடைக்குதுங்க. அப்படி என்ன மருத்துவ குணங்கள் இருக்கு, எப்படி செய்யலாம்னு பார்ப்போமா!


பாதாம் பிசின் கல்கண்டு மாதிரி இருக்குங்க. பாதாம் மரத்தில் இருந்து வடியும் பிசினில் இருந்து இந்த பாதாம் பிசின் தயாரிக்கப்படுகிறது.


- உடல்  உஷ்ணத்தை குறைக்கிறதுக்கு பாதாம் பிசின் உதவுதுங்க.


- புரோட்டின் சத்து அதிக அளவு உள்ளது. எலும்புகள், தசைகள், தசை நார்கள் மூட்டுகளை வலுப்படுத்த உதவுகிறது.




- பாதாம் பிசினில் அதிகப்படியான ஜின்க் உள்ளது. இது ஆண்களின் டெஸ்டோஸ்டிரான் அளவை அதிகரிக்க உதவுகிறது.


- உடல் எடை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மேலும் மன சோர்வு, பதட்டம் போன்றவற்றையும் தடுக்கிறது.


- இது பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் மற்றும் இனப்பெருக்க மேம்பாட்டிற்கு உதவுதுங்க.


-அல்சர், நெஞ்செரிச்சல் போன்றவற்றிற்கு இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது.


சரி, எப்படி செய்யலாம்னு பாக்கலாமா!


செய்முறை: முதல்ல பாதாம் பிசின் நாலு பீஸ் எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு ஜெல்லி பதத்திற்கு வந்துடுங்க, பின்னர் ஒரு மிக்சிங் பவுலில் ஊறிய பாதாம் பிசின், ஒரு டம்ளர் காய்ச்சி ஃப்ரிட்ஜில்  வைத்த ஜில்லென்ற பால், 3 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.  பின் ஆப்பிளை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். பின் டூட்டி ஃப்ரூட்டி சிறிதளவு, செர்ரி பழங்கள் தேவையான அளவு, துருவிய பாதாம் சேர்த்து ஜில்லென்று சர்வ் பண்ணுங்க.




ஹெல்தி அண்ட் டேஸ்ட்டி டெஸர்ட் அல்லது மில்க் ஷேக் ரெடி.


வெயில் வேற ஆரம்பிச்சுருச்சு.. ஸோ, இது ரொம்ப ஆப்ட்டான பானம்தான்.. இப்பவே போய் ட்ரை பண்ணுங்க, தோழிகளே.. நன்றி பிரண்ட்ஸ்,  பை.. நெக்ஸ்ட் மீட்  பண்ணுவோம்!


புகைப்படம்: செளந்தரபாண்டியன்

சமீபத்திய செய்திகள்

news

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி

news

வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?

news

வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

news

Priyanka Gandhi.. வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி அதிரடி.. அண்ணன் சாதனையை முறியடித்த தங்கை!

news

14 மாநிலங்கள்.. 48 சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல்.. பாஜக 18, காங்கிரஸ் 8, திரினமூலுக்கு 6!

news

மகாராஷ்டிரா வெற்றி.. வரிந்து கட்டிக்கொண்டு பட்டாசு வெடித்த தமிழிசை.. அடுத்து சொன்ன அதிரடி வார்த்தை!

news

Wayanad by poll resutls.. அபார வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி.. 3.20 லட்சம் வாக்குகள் வித்தியாசம்!

news

Maharashtra poll results: உத்தவ், சரத் பவாருக்கு கெட் அவுட் சொன்ன ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார்!

news

Wayanad: வயநாட்டில் கொடி நாட்டிய பிரியங்கா காந்தி.. 4வது தலைமுறையிலிருந்து மேலும் ஒரு எம்.பி

அதிகம் பார்க்கும் செய்திகள்