உங்களுக்கு பிபி இருக்கா.. ரொம்ப டென்ஷனா இருக்கா?.. அப்படீன்னா இதையெல்லாம் மறக்காம பண்ணுங்க!

Feb 25, 2025,06:30 PM IST

சென்னை: நம்மில் பலருக்கும் இப்போது அதிகமாக இருக்கும் உடல் உபாதைகளில் பிபி என்று சொல்லப்படும் ரத்த அழுத்தமும் ஒன்று. நம்முடைய லைப்ஸ்டைல் மாற்றத்தாலும், எப்போதும் ஓடிக் கொண்டிருப்பதாலும், கவலைகள் அதிகரித்து விட்டதாலும் பிபி பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது.


சிலருக்கு ஹை பிபி எனப்படும் உயர் ரத்த அழுத்தம் இருக்கும். இவர்களுக்கு தொட்டதுக்கெல்லாம் கோபம் வரும், எரிந்து விழுவார்கள், எப்போதும் படபடப்பாக இருப்பார்கள். சின்ன விஷயத்துக்கெல்லாம் டென்ஷன் ஆகி விடுவார்கள். சிலருக்கு லோ பிபி எனப்படும் குறைந்த ரத்த அழுத்த பிரச்சினை இருக்கும். இவர்கள் பெரும்பாலும் அமைதியாக இருப்பார்கள். ஆனால் வெடிக்காத எரிமலை போல இந்த லோ பிபி.. ரொம்பும் டேஞ்சர். இவர்கள்தான் அதிக கவனமாக இருக்க வேண்டும்.


எந்த வகையான பிபியாக இருந்தாலம் சரி, சில முக்கியமான செயல்பாடுகளை நீங்கள் எப்போதும் கவனத்தில் கொண்டால் போதும்.. பிரச்சினையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். வாங்க அதைப் பார்ப்போம்.


அ. மன அழுத்தத்தை குறைப்பது: 




தியானம், யோகா மற்றும் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி போன்ற மனம் தெளிவடையும் முறைகளை பின்பற்றுங்கள். மன அமைதியை பேணி, உங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இது உதவும்.


ஆ. உணவுப் பழக்க வழக்கங்கள்: 


குறைந்த சர்க்கரை மற்றும் உப்புத்தன்மையில்லாத உணவுகளை உட்கொள்ளுங்கள். பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை அதிகம் சாப்பிடுங்கள். அதேசமயம் லோ பிபி உள்ளவர்கள் உப்பு சரியான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். டாக்டர்கள் ஆலோசனைய இதில் பின்பற்றுங்கள்.


இ. உப்பு அளவை கட்டுப்படுத்துங்கள்: 


உப்பை மிகக்குறைவாக பயன்படுத்துங்கள். மிகுந்த உப்புத்தன்மை ரத்த அழுத்தத்தை அதிகரிக்க முடியும். லோ பிபி உள்ளவர்கள் தேவையான அளவுக்கு உப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.


ஈ.  உடற்பயிற்சி: 


தினமும் சுமார் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள். இதனால் உங்கள் இதய சீரான முறையில் செயல்படும். உடற்பயிற்சியை எந்தக் காரணம் கொண்டும் ஸ்கிப் செய்யாதீர்கள்.


உ. மோசமானபழக்க வழக்கங்களை தவிருங்கள்: 


மோசமான பழக்கம் என்பது புகைப்பிடிப்பது மற்றும் மது பருகுவது போன்ற பழக்க வழக்கங்களை தவிர்த்து, ஆரோக்கியத்தை பேணுங்கள்.  அதிக அளவிலான டீ, காபி குடிப்பதும் கூட சற்று மோசமான பழக்கம்தான். அதையும் கூட கட்டுக்குள் வைத்திருப்பது நல்லதுதான்.


ஊ. நல்ல தூக்கம்:


நன்றாக தூங்க வேண்டியது எல்லோருக்குமே அவசியம். தினசரி 7-8 மணிநேரம் தூங்குங்கள். நல்ல தூக்கம் உங்கள் உடலின் பிரச்சினைகளை சரிசெய்ய உதவும்.


எ. மருத்துவ ஆலோசனை: 


குறித்த கால இடைவெளியில் உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. அவ்வப்போது உங்கள் ரத்த அழுத்தத்தை பரிசோதித்து, அதை கட்டுப்படுத்துவதற்காக மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.


ஏ. நீரிழிவு கட்டுப்பாடு: 


அதிக நீரிழிவு (சர்க்கரை வியாதி) உள்ளவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்தக் கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். ரத்த அழுத்தத்தோடு, சர்க்கரையும் சரியான அளவில் இருக்கிறதா என்பதை குறித்த கால இடைவெளியில் பரிசோதித்துக் கொண்டு வர வேண்டும்.


ஐ. தன்னம்பிக்கை தேவை:


தன்னம்பிக்கையுடன் இருப்பது மனசுக்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும் கூட நல்லது செய்யும். உங்கள் மனநிலை மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த அது உதவும். தினமும் நேர்மறையாக நினைக்க முயலுங்கள். எதிர்மறையானவற்றை மறந்து விடுங்கள்.


ஒ. ஹெல்த்துக்கு முக்கியத்துவம்:




எப்போதும் மற்றவற்றுக்காக ஓடுவதை நிறுத்தி விட்டு, ஒரு வயதுக்குப் பிறகு உங்களது உடல் நலனை கருத்தில் கொண்டு அதற்காக ஓட ஆரம்பியுங்கள். உங்கள் உடலில் என்ன பிரச்சினையெல்லாம் இருக்கிறது என்பதை அடையாளம் காணுங்கள். எந்த நேரத்திலும் உங்கள் உடல்நிலை குறித்து அக்கறை காட்டுங்கள். நேசிக்கவும், உங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்.


ஓ. தண்ணீர் குடிங்க: 


போதிய அளவில் தண்ணீர் பருக வேண்டியது அவசியம்.  உங்கள் உடல் தேவையான நீர்ச்சத்த்தை பராமரிக்க இது அவசியமானது. தண்ணீர் அவ்வப்போது குடித்து வர வேண்டியது கட்டாயமும் கூட.


எந்த உடல் உபாதையாக இருந்தாலும் சரி, நிதானமான முறையிலும், அதேசமயம், துல்லியமான மதிப்பீடு மற்றும் துரிதமான சிகிச்சை முறைகளை எடுத்துக் கொண்டால், நமது பிரச்சினைகளை எளிதாக சரி செய்ய முடியும் அல்லது கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.


இது எல்லாவற்றையும் விட முக்கியமானது மனசை லேசாக வைத்துக் கொள்ளுங்கள்.. தேவையானதை மட்டும் அங்கு நிரப்பி வையுங்கள்.. தேவையில்லாதவற்றை தூக்கி வீசி விடுங்கள்.. சிம்பிள்.. வாழ்க்கையும் அழகாக இருக்கும், உடல் ஆரோக்கியமும் அற்புதமாக இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விஜய்யின் 3வது மேடைப் பேச்சு... என்னாவா இருக்கும்?.. ஆர்வத்தில் மக்கள்

news

தொகுதி மறுசீரமைப்பால் ஆபத்து.. மார்ச் 5ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

100 ஆண்டுகளில் இந்தியாவில் தங்கத்தின் விலை.. நம்ம அப்பத்தாக்கள் கொடுத்து வைத்தவர்கள்!

news

குடையோடு போங்க மக்களே.. தமிழ்நாட்டில் பிப் 27,28 மார்ச் 1.. ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு..!

news

Venjaramoodu Mass murder: மாமா, அத்தை, தம்பி, காதலி, பாட்டி.. 5 பேரை கொன்ற சைக்கோ இளைஞர்!

news

மத்திய அரசிடம் ஈகோ பார்க்கிறது மாநில அரசு: பாஜக மூத்த தலைவர் தமிழிசை

news

தமிழ்நாடு முழுவதும் ஹிந்தி திணிப்புக்கு எதிராக.. மத்திய அரசை கண்டித்து திமுக மாணவர் அணி போராட்டம்!

news

உங்களுக்கு பிபி இருக்கா.. ரொம்ப டென்ஷனா இருக்கா?.. அப்படீன்னா இதையெல்லாம் மறக்காம பண்ணுங்க!

news

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு.. இனி மக்கள் சேவையில் என் புதிய பாதையில் புதிய பயணம்..ரஞ்சனா நாச்சியார்

அதிகம் பார்க்கும் செய்திகள்