நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி.. டெல்லியில் இன்று கூடுகிறது காங் காரிய கமிட்டி கூட்டம்

Nov 29, 2024,10:40 AM IST

டெல்லி: காங்கிரஸ் குழு கூட்டம் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு டெல்லியில் நடைபெற உள்ளது.


நாடாளுமன்ற குளிர்கால கூட்டுத் தொடர் கடந்த நவம்பர் 25  ஆம்  தொடங்கி டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா கூட்டணி சேர்ந்த எதிர்க்கட்சியினர் அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம், சம்பல் துப்பாக்கி சூடு உள்ளிட்டவை குறித்து பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர். ஆனால் இந்த கருத்துக்கள் எதையும் மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிகிறது. அப்போது  தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அமலியில் ஈடுபட்டதால் இரண்டு முறையும் ராஜ்யசபா லோக்சபா என இரு அவைகளும்  ஒத்திவைக்கப்பட்டன.




இந்த நிலையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று பிற்பகல் 2:30 மணி அளவில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ், பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உட்பட பல்வேறு செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தக் கூட்டத்தில் மக்களவையில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள், தற்போதைய அரசியல், பொருளாதார பிரச்சினைகள், குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. 


அதே சமயத்தில் அடுத்த ஆண்டு வரும் டெல்லி சட்டசபை தேர்தல் குறித்தும் விவாதிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் எம்பியாக பிரியங்கா காந்தி பதவியேற்ற பிறகு காங்கிரஸ் சார்பில் நடைபெறும் முதல் காரியக் கமிட்டி கூட்டம்  இதுவே என்பது நினைவிருக்கலாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தனுஷ் போட்ட வழக்கு.. நாங்கள் எந்த விதி மீறலிலும் ஈடுபடவில்லை.. நயன்தாரா-விக்னேஷ் சிவன் பதில்!

news

வாடகைக் கட்டடங்களுக்கு 12% ஜிஎஸ்டி விதிப்பதா?.. சேலம், ஈரோடு, மதுரையில் வணிகர்கள் போராட்டம்

news

Guinnes Record: ஒரு மணி நேரத்தில் 1500 புஷ் அப்கள்.. 59 வயது பெண்மணி அசத்தல்.. கனடாவில்!

news

சென்னை கோயம்பேடு சந்தை: இன்று காய்கறிகளின் விலை எவ்வளவு தெரியுமா?

news

Singer Suchitra: பாவம்னு வாய்ப்பு கொடுத்தா.. மன உளைச்சல் தந்துட்டாங்க.. இசையமைப்பாளர் புலம்பல்!

news

ஃபெங்கல் புயல் ஒரு பக்கம் டென்ஷன்.. தங்கம் விலை இன்னொரு டென்ஷன்.. இன்றைய விலை இதுதான்!

news

Cyclone alert: ஆழ்ந்த காற்றழுத்தம் இன்று புயலாக மாறும்.. நாளை கரையைக் கடக்கும்

news

Red alert: தமிழகத்தில் அதி கன மழை எச்சரிக்கை.. இன்றும் நாளையும் ரெட் அலர்ட் அறிவிப்பு

news

Depression வலுவடைந்துள்ளது.. காற்றின் வேகம் 30 நாட்ஸ்.. 35 ஆனால் புயலாகும்.. Tamilnadu Weatherman

அதிகம் பார்க்கும் செய்திகள்