கர்நாடக தேர்தலுக்குப் பிறகு.. மொத்தமாக ஒன்று கூடும் எதிர்க்கட்சிகள்.. அதிரடி ஸ்கெட்ச்!

Apr 25, 2023,04:40 PM IST
டெல்லி: கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிந்த பிறகு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று கூடி நாடாளுமன்றத் தேர்தலுக்கு வலுவான கூட்டணி அமைப்பது தொடர்பாக முக்கிய ஆலோசனையை நடத்தவுள்ளன.

அகில இந்திய அளவில் அத்தனை பேரின் பார்வையும் கர்நாடக சட்டசபைத் தேர்தல் மீதுதான் படிந்துள்ளது. தற்போது கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. பாஜக ஆட்சிக்கு வந்ததே, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கித்தான். தற்போது தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆட்சியை பாஜக தக்க வைக்குமா அல்லது பறி கொடுக்குமா என்ற விவாதம் அனல் பறந்து வருகிறது.

ஆனால் இதுவரை வெளியான எந்தக் கருத்துக் கணிப்புமுடிவுமே பாஜகவுக்கு சாதகமாக இல்லை. பாஜக ஆட்சியைப் பறி கொடுக்கும், காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றும் என்றுதான் கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. மேலும் பல முக்கியத் தலைவர்கள் பாஜகவை விட்டு வெளியேறி விட்டனர். பாஜகவுக்கும் மக்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்ப்பும் அதிருப்தியும் நிலவுகிறது.



இந்த நிலையில் கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு மிக முக்கியமான ஒரு ஆலோசனைக் கூட்டத்தை எதிர்க்கட்சிகள் நடத்தத் திட்டமிட்டுள்ளன. காங்கிரஸ் தலைமையில் 19 கட்சிகள் கூடி இந்த ஆலோசனைக்  கூட்டத்தை நடத்தவுள்ளன. ஏற்கனவே ஏப்ரல் மாத இறுதியில் இந்த கூட்டத்தை நடத்த முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் குறுக்கிட்டு விட்டதால் அதை மே மாதத்திற்குத் தள்ளி வைத்துள்ளனர். அதாவது மே 13ம் தேதிக்குப் பிறகு கர்நாடகத்தில் ஆட்சியெல்லாம் அமைந்த பிறகு இக்கூட்டம் நடத்தப்படும் என்று தெரிகிறது.

இந்தக் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமை தாங்குவார். இந்தக் கூட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் காங்கிரஸ் தரப்பில் தொடர்பு கொண்டுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான மோதலைக் கொடுக்க காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. இதற்காக எதையும் விட்டுத் தரவும் அந்தக் கட்சி தயாராக உள்ளது. பிரதமர் வேட்பாளர் முதல் கூட்டணித் தலைமை வரை எல்லாவற்றையும் விட்டுத் தரவும் அக்கட்சி தயார் நிலையில் உள்ளது.  மமதா பானர்ஜியும் கூட தற்போது இறங்கி வந்துள்ளார். இப்படி எல்லோரும் ஒரே பக்கமாக திரண்டு வருவதால் வலுவான கூட்டணி இந்த முறை அமையுமா என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. 

மமதா பானர்ஜி மட்டுமல்லாமல், அகிலேஷ் யாதவும்  கூட தற்போது இறங்கி வருவது போல தெரிகிறது. எனவே இதைப் பயன்படுத்தி கூட்டணியை உறுதி செய்ய காங்கிரஸ் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. இந்த வேலைகளில் கார்கே தீவிரமாக இறங்கவுள்ளார். விரைவில் அவர் மமதா மற்றும் அகிலேஷ் யாதவுடன் பேசுவார் என்று தெரிகிறது. 

ஆனால் இவர்கள் இணைந்தால் மட்டும் போதாது தெலங்கானாவில் சந்திரசேகர ராவையும் கூட்டணியில் இணைக்க வேண்டும். அதேபோல சந்திரபாபு நாயுடு போன்றோரையும் இணைக்க வேண்டும். இதெல்லாம் நடந்தால்தான் முழுமையான பலத்தை பாஜகவுக்குக் காட்ட முடியும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்