சென்னை : அரசுடன் சிறு சிறு சங்கடங்கள் இருப்பது உண்மை தான் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் செல்வ பெருந்தகை கூறி இருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக இவர் அளித்து வரும் பேட்டிகள் கூட்டணியில் ஒரு விதமான குழப்ப நிலையை ஏற்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் செல்வ பெருந்தகையிடம், காங்கிரஸ் கட்சியின் ஆர்ப்பாட்டம் போன்றவற்றிற்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுகிறதே என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கூட்டணி என்பது வேறு, அரசு என்பது வேறு. அரசுடன் சிறு சிறு சங்கடங்கள் இருப்பது உண்மை தான். மேலிடத்தில் இருந்து என்ன தான் சொன்னாலும் அதை நிறைவேற்ற வேண்டியது அதிகாரிகள் தான். ஆனால் சில அதிகாரிகள், என்ன தான் மேலிடத்தில் இருந்து சொன்னாலும் கண்டிப்புடன் நடந்து கொள்கிறார்கள். அதனால் தான் எங்களுக்க அனுமதி மறுக்கப்படுகிறது. இதற்கும் கூட்டணிக்கும் தொடர்பு கிடையாது என்றார்.
விஜய்யின் தவெக மாநாட்டிற்கு அதிக அளவில் இளைஞர்கள் கூட்டம் வந்தது பற்றி அவரிடம் கேட்டதற்கு, விஜய் மாநாட்டிற்கு வந்தது ஒன்றும் பெரிய கூட்டம் கிடையாது. இதை விட அதிகமானவர்கள், கொட்டும் மழையிலும் நாற்காலியை விட்டு எழுந்திருக்காமல் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் இரு ஒரு பெரிய விஷயம் இல்லை என்றார்.
விஜய் தன்னுடைய கட்சி மாநாட்டில் தங்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தருவோம் என அறிவித்தார். இதனால் விஜய் மாநாடு முடிந்த மறுநாள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செல்வ பெருந்தகை, ஆட்சியில் பங்கு கேட்டு திமுக தலைமைக்கு கடிதம் எழுதியதாக தகவல் வெளியானது. இதுவே திமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதா? கூட்டணியில் இருந்து வெளியேற காங்கிரஸ் தயாராகி விட்டதா? என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இன்று அரசுடன் சங்கடங்கள் இருப்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளதும் அனைவரையும் குழப்பமடைய செய்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அமரன் படத்தினால் மனஉளைச்சல் அடைந்த மாணவன்.. ரூ. 1.1 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்!
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
கொங்கு நாட்டு நெல்லி, தக்காளி சட்னி + multigrains ஆட்டா அடை.. செம காம்போ மக்களே.. சாப்ட்டு பாருங்க
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
{{comments.comment}}