டெல்லி: தென் இந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போல இருப்பதாக பேசி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சாம் பிட்ரோடா.
காங்கிரஸ் கட்சியின் அறிவு ஜீவி தலைவர்களில் ஒருவராக வர்ணிக்கப்படுபவர் சாம் பிட்ரோடா. ராஜீவ் காந்தி காலத்து தலைவர் இவர். இந்தியாவில் தகவல் தொழில்நுட்பப் புரட்சியைக் கொண்டு வந்த ராஜீவ் காந்தியின் கொள்கைக்குப் பின்னால் இருந்தவர். இப்போது அமெரிக்காவில் இருக்கும் சாம் பிட்ரோடா சமீப காலமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.
இவரது பேச்சுக்கள் இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தர்மசங்கடத்தையும், சிக்கலையும் ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் வாரிசு வரி விதிப்பு குறித்து அவர் பேசியிருந்தார். இதை பாஜக தனக்கு சாதகமாக மாற்றிப் பிரச்சாரத்திலும் பயன்படுத்தியது. இந்த நிலையில் இன வெறியைத் தூண்டும் வகையிலான கருத்தை வெளியிட்டுள்ளார் சாம் பிட்ரோடா. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தி ஸ்டேட்ஸ்மேன் இதழுக்கு அளித்த ஒரு பேட்டியில், இந்தியா ஒரு மாறுபட்ட நாடு. இங்கு கிழக்கில் உள்ள மக்கள் சீனர்களைப் போல இருப்பார்கள். மேற்கு இந்தியர்கள் அரேபியர்கள் போல இருப்பார்கள். வடக்கில் இருப்பவர்கள் வெள்ளையாக இருப்பார்கள். தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்கள் போல காணப்படுவார்கள் என்று கூறியிருந்தார் சாம் பிட்ரோடா.
இந்த கருத்து குறித்து காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ் கூறுகையில், இந்தியாவின் வேற்றுமையிலும் ஒற்றுமை குறித்து சாம் பிட்ரோடா கூறிய கருத்துக்கள் மிக மிக தவறானவை, ஏற்றுக் கொள்ள முடியாதவை. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி இந்த கருத்திலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது. அதை நாங்கள் ஆதரிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியும் சாம் பிட்ரோடா கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் ஆகியோரும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஹிமந்தா பிஸ்வாஸ் கூறுகையில், சாம், நான் கிழக்கிலிருந்து வருபவன். நான் இந்தியனாகத்தான் இருக்கிறேன். நாங்கள் வேறுபட்டு இருக்கலாம்.. ஆனால் ஒன்றாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார். நடிகை கங்கனா ரனாவத்தும் சாம் பிட்ரோடாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆக மொத்தம் ஒன்னு மட்டும் தெளிவாப் புரியுது.. பொறுப்பான தலைவர்கள் பலரும், பொறுப்பில்லாமல்தான் தொடர்ந்து பேசிட்டிருக்காங்க..!
தமிழகத்தில்.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!
விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!
குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!
மாற்றுத்திறனாளிகள் குறித்த சர்ச்சை பேச்சு...வருத்தம் தெரிவித்த அமைச்சர் துரைமுருகன்
காங்கிரஸ் கம்யூனிஸ்ட்டை கண்டித்து.. தீர்மானங்களை கொண்டு வாங்க பார்ப்போம்..எடப்பாடி பழனிச்சாமி சவால்
அமித்ஷா பிரஸ்மீட் மேடையில் திடீர் Change.. டிஜிட்டல் பேனரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெயர் நீக்கம்
திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கம்... புதிதாக திருச்சி சிவா நியமனம்!
அமித்ஷாவை சந்திக்கும் அதிமுக தலைவர்கள்.. தேமுதிகவுக்கு டைம் கொடுக்க மறுத்ததா பாஜக?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 11, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}