பெண்கள் குறித்த சீமானின் பேச்சை டாக்டர் தமிழிசை ஆதரிக்கிறாரா?.. காங்கிரஸ் எம்பி சுதா கேள்வி

Mar 01, 2025,12:27 PM IST

சென்னை: சீமானின் பெரியார் குறித்த சர்ச்சை பேச்சிற்கு, அவர் எங்கள் தீம் பாட்னர் என்று சொன்ன டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், சீமானின் சர்ச்சை கருத்தை ஆதரிக்கிறாரா என  எம் பி சுதா கேள்வி எழுப்பி உள்ளார்.


சமீபத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்த அவதூறு கருத்துக்களை பேசியிருந்தார். இவரின் பேச்சுக்கு தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அப்போது பாஜக மூத்த தலைவரான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சீமானின் சர்ச்சை பேச்சுக்கு அவர் எங்கள் தீம் பாட்னர் என கூறியிருந்தார்.


 இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பியும் வழக்கறிஞரும் ஆன சுதா காட்டமான கேள்விகளை எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, 




தான் மோசமான அரசியல்வாதி மட்டுமல்ல அநாகரிகமான மனிதர் என்பதை மீண்டும் ஒருமுறை சீமான் நிரூபித்திருக்கிறார். பெண்கள் தொடர்பாக பொது வெளியில் அயோக்கியர்கள் கூட பேச தயங்கும் வார்த்தைகளை கூச்சமின்றி பேசியிருக்கிறார். 50 சதவீதத்திற்கு மேல் பெண்கள் வசிக்கும் தமிழகத்தில் உட்கார்ந்து கொண்டு பெண்ணை கொச்சைப்படுத்தி பேசி கொண்டிருக்கிறார். சீமானை ஆதரிக்கும் தம்பிகளின் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை சீமான் பிடியில் இருந்து விடுவிப்பது வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது.


பெரியார் விவகாரத்தில் ஆதாரம் இன்றி அவதூறாக சீமான் பேசியபோது அவர் எங்கள் தீம் பார்ட்னர் என்று டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். சீமான்  பேசிய பேச்சுக்கள் எந்த நாகரிக சமுதாயத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என கூறினார்.


மேலும் சீமானின் பெரியார் குறித்த சர்ச்சை பேச்சுக்கு, அவர் எங்கள்  தீம் பார்ட்னர் என்று சொன்ன டாக்டர். தமிழிசை என்ன சொல்லப் போகிறார். அவர் கருத்தை ஆதரிக்கிறாரா என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டமன்றத் தேர்தலில்..விஜய் தனித்து போட்டியிட முடிவு..தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்

news

அமெரிக்க அதிபர் டிரம்ப் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பில் கடும் வாக்குவாதம்... நடந்தது என்ன?

news

சீமான் பேட்டிக்கு பதில் அளித்து..சரமாரியாக கேள்வி கேட்டு.. மீண்டும் வீடியோ வெளியிட்ட நடிகை!

news

குட் பேட் அக்லி பட டீசர்... 12 மணி நேரத்தில் 17 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை!

news

Summer rain.. மேலிருந்து வீழம் ஈரத் துளிகள் பட்டு.. மயங்கும் நிமிடங்களில்!

news

தமிழ்நாட்டில் இன்று.. 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. கோடை பருவமழை கணக்கீடு தொடக்கம்..!

news

சம்பா ரவை உப்புமா.. சூப்பர் டேஸ்ட்டி.. சுப்ரீ்ம் ஜாய்.. செஞ்சு பாருங்க.. சொக்கிப் போவீங்க!

news

தெலுங்கானா சுரங்க விபத்தில்.. 2 இன்ஜினியர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு!

news

இந்தி திணிப்பை கைவிட வேண்டும்.. மக்களுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் செய்தி

அதிகம் பார்க்கும் செய்திகள்