ராஷ்மிகாவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்: காங்கிரஸ் எம்எல்ஏ ரவிகனிகா கொந்தளிப்பு!

Mar 04, 2025,05:52 PM IST

பெங்களூரு: கன்னட  சினிமா மூலம் வளர்ச்சி அடைந்துவிட்டு கன்னடர்களை அவமதிக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ ரவி கனிகா கூறியுள்ளார்.


தெலுங்கு திரையுலகில் முன்னணி நடியாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கிரிக் பார்ட்டி என்ற கன்னடப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கியவர். அதன் பின்னர் அவர் விஜய் தேவரகொண்டாவுடன் தெலுங்கு  படத்தில் நடித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில், அந்த மொழி ரசிகர்களை கவர்ந்தார். பின்னர் கன்னடம், தெலுங்கு என பல படங்களில் நடித்தார். 2021ம் ஆண்டு சுல்தான் படம் மூலம் தமிழ் பக்கம் வந்தார். அதன்பின்னர் விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்தார். அந்த படமும் ஹிட்டடித்த நிலையில், சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான புஷ்பா 2 படமும் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாகவே மாறியது.




இந்நிலையில், பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவிற்கு கடந்த ஆண்டு ராஷ்மிகாவை பலமுறை அழைத்தும் அவர் வரவில்லை என்று காங்கிரஸ் எம்எல்ஏ ரவி கனிகா தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. தனது வீடு ஐதராபாத்தில் இருப்பதாகவும், கர்நாடகா எங்கிருக்கிறது என்பது தனக்கு தெரியாது என்று ராஷ்மிகா கூறியதாகவும், கன்னட  சினிமா மூலம் வளர்ச்சி அடைந்துவிட்டு கன்னடர்களை அவமதிக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ ரவி கனிகா கூறியுள்ளார்.


இதனையடுத்து, ராஷ்மிகாவிற்கு எதிராக கன்னட அமைப்புகள் போர் கொடி தூக்கி வருகின்றனர்.ரவி கனிகாவின் கருத்தை குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஒன்றிய இணை அமைச்சர் ராஜிவ் சந்திர சேகர் காங்கிரஸ் குண்டர் கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டு என விமர்சித்துள்ளார்.தங்கள் மண் சார்ந்து பேச தங்களுக்கு உரிமை உள்ளதாக ராஜிவ் சந்திர சேகருக்கு ரவி கனிகா பதிலளித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Champions Trophy 2025.. இறுதிப் போட்டியில் இந்தியா.. ஆஸ்திரேலியாவை அடித்துத் துரத்தியது!

news

மீண்டும் தாமரையுடன் சங்கமிக்கத் தயாராகிறதா இரட்டை இலை.. பரபரக்கும் அரசியல் களம்!

news

கவிஞர் நந்தலாலா மறைவு வருத்தம் தருகிறது.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் தருவதாக அதிமுக கூறியதா..? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!

news

ராஷ்மிகாவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்: காங்கிரஸ் எம்எல்ஏ ரவிகனிகா கொந்தளிப்பு!

news

தொகுதி மறு சீரமைப்புக்கு எதிர்ப்பு.. அனைத்து கட்சிக் கூட்டம்.. தவெக சார்பில் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்பு

news

2026ல் தவெக ஆட்சி அமைக்கும் என விஜய் பகல் கனவு காண்கிறார்.. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

news

வட நாட்டில் ஏன் தமிழ் பிரச்சார சபா நிறுவவில்லை..? முதல்வர் மு க ஸ்டாலின் கேள்வி!

news

திருச்சியின் பண்பாட்டு வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமை கவிஞர் நந்தலாலா.. தமுஎகச இரங்கல்

அதிகம் பார்க்கும் செய்திகள்