காங்கிரஸ் தொகுதி சொல்லியாச்சு.. அடுத்து என்ன விருப்ப மனுதான்.. இன்று முதல் விண்ணப்பிக்கலாமாம்!

Mar 18, 2024,04:36 PM IST

சென்னை: திமுக கூட்டணியில் தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஆக மொத்தம் பத்து தொகுதிகளுக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம் என அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 என தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் கட்சிகளின் செயல்பாடுகள் வேகம் பிடித்துள்ளன. திமுக கூட்டணி இன்று தனது தொகுதிப் பங்கீட்டை முழுமையாக முடித்து விட்டது. காங்கிரஸ் கட்சிக்கான 9 தொகுதிகளையும் இன்று அறிவித்தது திமுக. இக்கூட்டணியில்  திமுகவுக்கு 21 தொகுதியும், காங்கிரசுக்கு 10 தொகுதியும், முஸ்லீம் லீக், மதிமுக மற்றும் கொமதேக வுக்கு தலா ஒரு  தொகுதியும், சிபிஐ,  சிபிஎம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா இரண்டு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.


திமுக கூட்டணியில், தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சிவகங்கை, விருதுநகர், கரூர், கடலூர், திருநெல்வேலி, மயிலாடுதுறை, கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகளும் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கபட்டுள்ளன. 




இந்த நிலையில்  காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் இன்று முதல் சென்னை சத்தியமூர்த்தி பவனில்  ரூபாய் 500  கட்டணமாக செலுத்தி விருப்ப மனுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருப்ப மனு படிவங்களை பூர்த்தி செய்யப்பட்ட பின் புதன்கிழமை மதியம் ஒரு மணிக்குள் செலுத்த வேண்டும். நாடாளுமன்ற பொதுத் தொகுதிக்கு ரூபாய் 30,000, தனித் தொகுதி மற்றும் மகளிருக்கான தனித் தொகுதிக்கு ரூபாய் 15,000 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். 


அதேபோல் விளவங்கோடு  சட்டசபைத் தொகுதிக்கு ரூபாய் 10,000 , மகளிருக்கு ரூபாய் 5000 நன்கொடையாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்ற பெயரில் வங்கியில் காசோலையாக மட்டுமே செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது

சமீபத்திய செய்திகள்

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

news

'இட்லி கடை' பிரியர்களே.. ஹேப்பி நியூஸ் .. அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறார் தனுஷ்!

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்