சென்னை: மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ஆர். சுதா அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆர். சுதா தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவராக இருக்கிறார். உயர்நீதிமன்ற வழக்கறிஞராகவும் பணியாற்றுகிறார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. புதுச்சேரியிலும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடுகிறது.
தமிழ்நாட்டில், திருவள்ளூர் (தனி) தொகுதியில் சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரியில் கே. கோபிநாத், கரூர் தொகுதியில் ஜோதிமணி, கடலூர் தொகுதியில் எம்.கே. விஷ்னு பிரசாத், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரியில் விஜய் வசந்த், திருநெல்வேலியில் ராபர்ட் ப்ரூஸ் போட்டியிடவுள்ளனர்.
அதேபோல விளவங்கோடு சட்டசபை இடைத் தேர்தலில் டாக்டர் தாரகை போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மயிலாடுதுறை தொகுதி வேட்பாளர் பெயர் மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது. அந்த தொகுதிக்கு வேட்பாளராக போட்டியிட கடும் போட்டி நிலவி வந்தது. முன்னாள் மத்திய அமைச்சர்களான திருநாவுக்கரசர், மணிசங்கர் ஐயர் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டனர். இந்த நிலையில் நாளை வேட்பு மனு தாக்கல் நிறைவடைய உள்ள சூழலில் இன்று இரவு மயிலாடுதுறை வேட்பாளரை காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.
அதன்படி ஆர் சுதா வேட்பாளராக போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நாளை ஆர்.சுதா தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர்கள் 10 பேரில் 2 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கு. அதேபோல விளவங்கோட்டிலும் பெண்ணையே வேட்பாளராக நிறுத்தியுள்ளது காங்கிரஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்
பாம்பன் பாலத்தை திறந்து வைக்க நாளை வருகிறார்.. பிரதமர் மோடி..பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!
தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
இலங்கையில் பிரதமர் மோடி.. ஜனாதிபதி மாளிகையில் அணி வகுப்பு மரியாதையுடன் வரவேற்பு..!
நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தொடர் குறைவில் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!
தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!
{{comments.comment}}