நீட் கட்டாயம் கிடையாது.. ஜிஎஸ்டி ரத்து செய்யப்படும்.. காங்கிரஸ் அதிரடி தேர்தல் அறிக்கை!

Apr 05, 2024,07:47 PM IST

டெல்லி: நீட் தேர்வு மாநில அரசுகளின் உரிமைக்கு விடப்படும். அவர்கள் விரும்பினால் நடத்தலாம், இல்லாவிட்டால் விலக்கு பெறலாம். ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட்டு புதிய வரி விகிதம் அமல்படுத்தப்படும். அக்னிபாத் திட்டம் கைவிடப்படும். மக்கள் விரோத சட்டங்களைத் திருத்த நடவடிக்கை எடுப்போம் என்பது உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகளுடன் கூடிய காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.


காங்கிரஸ் கட்சி மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. டெல்லியில் இந்த அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே அதை விளக்கிப் பேசினார். இந்த நிகழ்வில் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:




- ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு முழு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும்.


- 25 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ ஹோல்டர்களுக்கு ஒரு வருட கால பயிற்சி அளிக்கப்படும்.


- தேர்தல் சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்படும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரப் பயன்பாடு மேம்படுத்தப்படும். வாக்களிப்பதில் ஒளிவுமறைவு இல்லாத நிலை உறுதிப்படுத்தப்படும்.


- தனி நபர்களின் உணவு மற்றும் உடை சுதந்திரத்தில் அரசு தலையிடாது. ஒருவரது திருமண உரிமையில் அரசு தலையிடாது. நாட்டின் எந்தப் பகுதியிலும் யாரும் பயணிக்கலாம், வசிக்கலாம். அந்த சுதந்திரம் உறுதி செய்யப்படும்.  மக்களின் தனிப்பட்ட சுதந்திரங்களைப் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.


- பாஜக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தும் திருத்தப்படும்.


- ஏழைப் பெண்களுக்கு வருடத்திற்கு ரூ. 1 லட்சம்  வழங்கும் மகாலட்சுமி திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.


- நாடு முழுவதும் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.


- தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி (எம்பி, எம்எல்ஏக்கள்) தான் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியை விட்டு விலகி வேறு கட்சியில் சேர்ந்தால் அவரது பதவி தானாகவே பறி போகும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்.




- மத்திய அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தரப்படும்.


- உயர் கல்வி படிக்க விரும்பும் மாணவ, மாணவியருக்கு ரூ. 7 .5லட்சம்  கல்விக் கடன் வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும்.


- பாஜகவில் சேர்ந்த பிறகு யார் மீதான வழக்குகள் எல்லாம் கைவிடப்பட்டதோ அவையெல்லாம் மீண்டும் விசாரிக்கப்பட்டு தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


- 100  நாள் வேலைத் திட்டத்தின் கீ்ழ் வழங்கப்படும் ஊதியமானது ரூ. 400 ஆக அதிகரிக்கப்படும்.


- பாஜக அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி சட்டம் நீக்கப்படும். புதிய ஜிஎஸ்டி சட்டம் கொண்டு வரப்படும். இதன் மூலம் ஏழை மக்கள் மீது விழுந்துள்ள வரிச் சுமை சரி செய்யப்படும்.


- ரூ. 25 லட்சம் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.


- பாஜக அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை, மாநிலங்களுடன் கலந்து ஆலோசித்து திருத்தப்படும்.


- தேர்தல் பத்திர முறைகேடு, பிஎம் கேர்ஸ் உள்ளிட்டவை குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்.


- தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைகளைத் தொடுக்க ரோஹித் வெமுலா பெயரில் சட்டம் கொண்டு வரப்படும்.


- அடுத்த 10 ஆண்டுகளில் ஜிடிபியை இரட்டிப்பாக்கும் வகையில் காங்கிரஸ் அரசின் பொருளாதாரக் கொள்கைகள் வகுக்கப்படும்.


- பாஜக அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டம் முழுமையாக கைவிடப்படும்.


- ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை முழுமையாக கைவிடுவோம்.


- சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அனைத்து விசாரணை அமைப்புகளையும் நாடாளுமன்ற, சட்டமன்ற கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.


காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மொத்தம் 25 உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டுள்ளன.  காங்கிரஸ் தேர்தல் அறிக்கையானது மகளிர், தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள் உள்ளிட்ட ஐந்து பிரிவினரின் வளர்ச்சி மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்