வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை மீண்டும் குறைவு..!

Apr 01, 2025,10:20 AM IST

டெல்லி: சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ஏற்கனவே  ரூபாய் 1965-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூபாய் 43.50 விலை குறைந்து, ரூ.1921 ஆக விற்பனையாகிறது.


இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சந்தைப்படுத்தும் வணிக சிலிண்டர்களின் விலையை தீர்மானிக்கின்றன. அதன்படி சிலிண்டர்களின் பயன்பாடுகளைப் பொறுத்து ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி சிலிண்டரின் விலை மாற்றம் செய்யப்படுகிறது. 2025ம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு அரசு எண்ணெய் சந்தை நிறுவனங்கள்  சிலிண்டர் விலையை குறைத்து. வணிக பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டர் விலை ரூ.14.50 குறைத்து , ரூ.1966-க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதே சமயத்தில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. 


இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 20 ஆம் தேதி வீட்டு உபயோக சிலிண்டருக்கு இந்திய எண்ணெய் நிறுவனம் கட்டுப்பாடுகளை விதித்தது. அதாவது ஒரு வீட்டில் 15 சிலிண்டர்கள் மட்டும் முன்பதிவு செய்ய முடியும். 14.20 கிலோ பயன்படுத்தி விட்டு அதற்கு மேல் தேவைப்பட்டால் அதற்கான உரிய காரணத்தை  கடிதமாக தந்த பிறகு தான் கூடுதல் சிலிண்டர்கள் பெற முடியும் என அறிவித்திருந்தது.




இந்த நிலையில் இன்று ஏப்ரல் ஒன்று புது கணக்குகள் தொடங்கப்படும் நிலையில், வணிக  சிலிண்டர்களின் விலை மீண்டும் குறைந்துள்ளன. 

சென்னையில் கடந்த மாதம் வரை ரூபாய் 1965 க்கு விற்கப்பட்டு வந்த வணிக சிலிண்டரின் விலை, தற்போது ரூபாய் 43.50 குறைந்து, ரூ. 1921 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அதே சமயத்தில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூபாய் 818க்கு விற்பனையாகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்