சென்னை: காமெடி நடிகர் ஜெயமணி மற்றும் அவரது நண்பர் மீது நீதிபதி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டு பின்னர் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார் ஜெயமணி. பார்க்க நடிகர் செந்தில் போலவே இருப்பார். அவரைப் போலவே காமெடி செய்து நடித்தும் வந்தார். வடிவேலு, விவேக் உள்ளிட்டோருடன் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சென்னை 7வது பெருநகர மாஜிஸ்திரேட் நீதிபதி திருமால், ஜெயமணி மற்றும் அவரது நண்பர் மாரிமுத்து ஆகியோர் மீது வேளச்சேரி போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில், வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் வைத்து தன்னை ஆபாசமாக பேசிய அவமரியாதை செய்யும் வகையில் ஜெயமணியும், மாரிமுத்துவும் நடந்து கொண்டதாக கூறியிருந்தார்.
இதையடுத்து இருவர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நேரில் அழைத்து விசாரித்து பின்னர் கைது செய்தனர். அதன் பின்னர் இருவரும் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இதுகுறித்து ஜெயமணி தரப்பில் கூறுகையில் வாக்கிங் போகும் பூங்காவுக்குள் நாயைக் கொண்டு வருவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு இது என்று தெரிய வந்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க துவங்கியது
ரூட்டை மாற்றும் ஃபெஞ்சல்... புயல் கரையை கடப்பதில் தாமதம்... வெதர்மேன் கொடுத்த அப்டேட்
சென்னைக்கு 100 கி.மீ தொலைவில் ஃபெஞ்சல் புயல்.. இடைவிடாமல் பலத்த மழை பெய்யக் கூடும்.. IMD
புயல் முழுமையாக நீங்க டிசம்பர் 5 வரை ஆகும்.. அதுவரை மழை இருக்கும்.. வானிலை ஆர்வலர் செல்வகுமார்
ஃபெஞ்சல் புயலால் கன மழை எதிரொலி.. வீடுகளுக்குள் பாம்பு புகுந்தால்.. இந்த நம்பரில் கூப்பிடுங்க!
Lunch box recipe: வாழைப்பூ அரைத்து விட்ட குழம்பு .. செம டேஸ்ட்டி.. சுப்ரீம் ஹெல்த்தி!
ஃபெஞ்சல் புயல் + கன மழை எதிரொலி.. சென்னையில் 9 சுரங்கப்பாதைகள் மூடல்.. தாம்பரத்திலும் பாதிப்பு!
அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் இலவச உணவு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னையில் மிக கன மழை.. பறக்கும் ரயில் சேவை முற்றிலும் ரத்து.. புறநகர் மின் ரயில் சேவையும் ரத்து
{{comments.comment}}