7 மாதங்களில்.. 105 லிட்டர் தாய்ப்பால் தானம்.. கோவை பெண்ணின் சபாஷ் சேவை!

Jan 26, 2023,12:37 PM IST
கோயம்புத்தூர்: கோவையைச் சேர்ந்த 27 வயதான கே. ஸ்ரீவித்யா என்ற பெண் கடந்த ஆண்டு 7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்து பெரும் பாராட்டைப் பெற்றுள்ளார்.



இந்த தாய்ப்பால் தானம், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.

அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மகப்பேறு மருத்துவமனைகளில் பிறக்கும் பல குழந்தைகளுக்கு  தாய்ப்பால் சரிவர கிடைக்காத நிலை நிலவுகிறது. இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. தாய்மார்களுக்கு தாய்ப்பால் சரிவர சுரக்காமல் இருப்பது, பிரசவத்திற்குப் பின்னர் தாய் இறந்து விடுவது என்று பல காரணங்கள் உள்ளன.

இப்படிப்பட்ட குழந்தைகளுக்காக பல தாய்மார்கள், தாய்ப்பாலை தானமாக வழங்குகின்றனர். முன்பு மிகவும் அரிதாக இருந்த இந்த சேவை தற்போது அதிகரித்துள்ளது. பலரும் முன்வந்து தாய்ப்பாலை தானமாக அளிக்கின்றனர். 

அவர்களில் ஒருவர்தான் கோவை வடவள்ளியைச் சேர்ந்த கே.ஸ்ரீவித்யா. இவருக்கு 27 வயதாகிறது.  ஸ்ரீதிவ்யா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரையிலான 7 மாத காலகட்டத்தில் மொத்தம் 105 லிட்டர் 980 மில்லி லிட்டர் தாய்ப்பாலை தானமாக அளித்துள்ளார்.

அமிர்தம் பவுண்டேஷன் மூலமாக, கோவை மருத்துவக் கல்லூரியில் உள்ள சிறப்பு சிசு பராமரிப்பு மையத்தில் உள்ள தாய்ப்பால் வங்கிக்கு இந்த தானத்தை அவர் அளித்துள்ளார்.  இது இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்திலும் சாதனையாக பதிவாகியுள்ளது.

ஸ்ரீவித்யாவுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். தற்போது 10 மாதமான பெண் குழந்தையும் அவருக்கு உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்