சொன்னதை மட்டுமல்ல.. சொல்லாததையும் செய்தோம்.. முதலிடத்தில் தமிழ்நாடு.. திமுக பெருமிதம்

May 15, 2024,06:03 PM IST

சென்னை: சொல்லியதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்தோம், தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது, மக்களின் வாழ்வாதாரமும் உயர்கிறது என திமுக தெரிவித்துள்ளது.


திமுக அரசின் 3 ஆண்டு கால ஆட்சி முடிவுற்று தற்போது 4ம் ஆண்டு தொடங்கியுள்ளது. இந்நிலையில் திமுக தலைமை இதுவரை முதல்வர் கொண்டு வந்த திட்டங்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


சொன்னதைச் செய்வோம் செய்ததை சொல்வோம் என்பது முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் கொள்கை முழக்கம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னதைச் செய்வோம் சொல்லாததையும் செய்வோம் என்று தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காக புதிய புதிய திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அவற்றுள் முக்கியமானவை,




தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞான பீடம், சாகித்ய அகாதமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் பெற்றவர்களுக்கு வீடுகள் வழங்கும் கனவு திட்டம். மக்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கான மருந்துகளை களப்பணியாளர்கள் இல்லங்களுக்கே சென்று வழங்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டம்!


கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படித்த மாணவர்களிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை ஈடு செய்யும் நோக்கத்துடன் தன்னார்வலர்களின் உதவியோடு நடைமுறைப்படுத்தப்பட்ட இல்லம் தேடி கல்வித் திட்டம். சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைத்திடவும் அதனால் குடும்பங்களுக்கு ஏற்படும் மருத்துவ செலவுகளை குறைப்பதற்கு இன்னுயிர்கள் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம்.


கல்லூரியில் படித்து பட்டம் பெற்று வேலைக்கேற்ற திறன் இல்லாதவர்களுக்காக காணப்படும் இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கி வேலைவாய்ப்புகளை பெற வழி வகுக்கும் நான் முதல்வன் திட்டம். கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்துக்கள் குறைபாடு உடைய ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் செய்து மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள் மற்றும் ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகள் ஆகியோரை பிரித்தறிந்து குழந்தைகளின் ஊட்டச்சத்துக்களை சத்துக் குறைபாட்டினை நீக்குவதற்கு வழிவகை செய்யும் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம்.




ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையில் பயிலும் எட்டு வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களும் கற்றலின் அடிப்படையில் ஆன வாசித்தல், எழுதுதல் எண்ணறிவு ஆகியவற்றை கற்று அதனை உறுதிப்படுத்தும் எண்ணும் எழுத்தும் திட்டம். உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் வேலை வாய்ப்புகள் மிகுந்த முதலீடுகளை ஈர்ப்பது என்ற இருமுனை அணுகுமுறைகள் கொண்டுள்ள முதலீட்டரர்களின் முதல் முகவரித் திட்டம். ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவியர் தடை இன்றி உயர் கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்தோடு கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம்.


ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாள்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம். அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த சமூக அமைப்புகள், பெரும் தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் ஆகியோருடன் இணைந்து பள்ளிகள் மேம்பாடு அடைவதை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டம்.


உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் கட்டடங்கள், கூடுதல் வகுப்பறைகள், கணினி அறைகள், ஆய்வகங்கள், கழிவறைகள், குடிநீர் வசதிகளை ஏற்படுத்தும் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம். நமது தமிழ் மரபின் வளமையை பண்பாட்டின் செழுமையையும் சமூக சமத்துவத்தையும் பொருளாதார மேம்பாட்டிற்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினரிடையே- குறிப்பாக கல்லூரி மாணவர்களிடையே கொண்டு செல்வதற்காக தொடங்கப்பட்ட மாபெரும் தமிழ் கனவு திட்டம்.


இரண்டு ஆண்டுகளில் 10,000 கிலோமீட்டர் நீளமுள்ள ஊராட்சி ஒன்றிய சாலைகளை ரூபாய் 4000 கோடியில் மேம்படுத்தும் முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டம். தொழில் முதலீட்டில் 35 சதவீதத் தொகையை அரசு மானியமாகவும் 65 சதவீத மூலதன தொகைக்குரிய வங்கிக் கடன் வட்டியில் 6 சதவீத வட்டி மானியமாகவும் அளித்து ஆதிதிராவிட சமுதாய இளைஞர்களையும் மகளிரையும் தொழில் முதலாளிகளாக உயர்த்தும் “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்”




திராவிட மாடல் அரசின் திட்டங்களின் பயனாளிகளைத் தொடர்பு கொண்டு, நலத்திட்டங்கள் குறித்த கருத்துகளைக் கேட்டறியும் புதுமையான நீங்கள் நலமா? திட்டம்.


ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் வீதம் ஐந்தாண்டுகளில் 1000 கோடி ரூபாய்ச் செலவில் ஆதி திராவிடர் குடியிருப்புகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரும் "அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்”


என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சொல்லியதை மட்டுமல்லாமல் சொல்லாததையும் செய்வோம் என்று கூறி நடைமுறைப்படுத்தும் பல்வேறு சிறப்பான திட்டங்களால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது! மக்களின் வாழ்வாதாரமும் உயர்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்