சென்னை: கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பினராயி விஜயன் 1944ம் ஆண்டு மே 24ம் தேதி கேரளாவின் கண்ணூர் மாவட்டத்திலுள்ள பினராயி என்ற கிராமத்தில் பிறந்தவர். 1964ல் மாணவர் சங்கத்தில் ஈடுபட்டு பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தவர். கேரளா வாலிபர் சங்கத்தில் மாநில தலைவராக இருந்தவர். கேரள கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1970 இல் நடைபெற்ற கேரள சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெற்றார். மீண்டும் 1977, 1991 மற்றும் 1996 சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். ஈ. கே. நாயனார் அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சராக 1996 முதல் 1998 வரை இருந்துள்ளார். 1998ல் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலகுழுவில் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002ஆம் ஆண்டு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியா கூட்டணியில் முக்கியத் தலைவராக தற்போது வலம் வரும் விஜயன், 2வது முறையாக கேரள மாநில முதல்வராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பினராயி விஜயன் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன். இந்த ஆண்டு வெற்றி நிறைந்த ஆண்டாக அமையட்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}