மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்.. முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம்!

Mar 11, 2025,05:16 PM IST

சென்னை:   தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் வன்மையாக கண்டித்துள்ளார்.


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டுத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று நடைபெற்றது . இந்த மக்களவை கூட்டத்தில் தமிழகத்திற்கு நீதி வேண்டுமென திமுக எம்பிக்கள் தொடர் முழக்கமிட்டனர். அப்போது சட்டத்திற்கு புறம்பாக தமிழ்நாட்டை வஞ்சிப்பதா என எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆவேசமாக பேசினார். இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டு எம்.பிக்கள் அநாகரிகமானவர்கள் என கூறினார். மத்திய கல்வி அமைச்சரின் இந்த பேச்சை கண்டித்து திமுக எம்பிக்கள் பலரும் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர். தொடர்ந்து பல்வேறு எதிர்ப்புகளை அடுத்து  அநாகரீகமானவர்கள் என்ற வார்த்தையை திரும்ப பெற்றார் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.




இந்த நிலையில், ஏற்கனவே தமிழகத்திற்கு நிதி தரமாட்டோம் என்ற தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு பலரும் கடுமையாக எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வரும் நிலையில், தற்போது மீண்டும் தமிழ்நாட்டு எம்.பிக்கள் அநாகரிகமாணவர்கள் என்று கூறியுள்ளார் தர்மேந்திர பிரதான். இதற்கு தமிழகத்தில் கடும் கண்டனம் வலுத்து வருகிறது. அந்த வரிசையில் முதல்வர் மு. க ஸ்டாலின் தர்மேந்திர பிரதானின் பேச்சை கண்டித்து தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,


தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும்! தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா? தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் இதனை ஏற்கிறாரா? 


NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே? பிரதான் அவர்களே, 


நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல!! நாங்கள் உங்கள் திட்டத்தை செயல்படுத்த முன்வரவில்லை, அப்படி முன்வராத என்னை யாராலும் வற்புறுத்த முடியாது. தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள் என பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் விட்டு விட்டு வச்சு செய்யும் கனமழை .. 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

news

நாடாளுமன்ற வளாகத்தில் 2வது நாளாக மத்திய அரசை கண்டித்து.. தமிழக எம்பிக்கள் கண்டனம் முழக்க போராட்டம்!

news

தமிழ்நாட்டில் மீண்டும் கம்பேக் கொடுத்த மழை.. இன்றும், நாளையும் பரவலாக மழை.. தமிழ்நாடு வெதர்மேன்!

news

ஐ.பி.எல் விளம்பரம் பாமகவிற்கு கிடைத்த வெற்றி.. பாமக தலைவர் அன்புமணி பெருமிதம்..!

news

Power of Biryani.. டி.எம்.எஸ்-ஸோட வெண்கலக் குரலின் ஈர்ப்புக்கு காரணம் என்ன தெரியுமா??

news

மதுபான ஊழல்.. காலையிலேயே அண்ணாமலை போட்ட X குண்டு.. என்ன சொல்ல வருகிறார்?

news

மொரீசியஸில் பிரதமர் நரேந்திர மோடி.. ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு!

news

இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியலப்பா.. கவலைப்படாதீங்க...இயற்கை முறையில் ஈஸியா விரட்டலாம்!

news

முதலீட்டாளர்களுக்கு முதல் முகவரி தமிழகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்