ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது‌.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!

Apr 08, 2025,05:54 PM IST

சென்னை: வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை இன்றைக்கு உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டும் இன்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என முதல்வர் மு க ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.


ஆளுநர் வழக்கில் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142 இன் கீழ் உச்ச நீதிமன்றத்திற்கு உள்ள சிறப்பு அந்தஸ்தை பயன்படுத்தி குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பிய பத்து மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்க உத்தரவிட்டுள்ளது. இது வரவேற்கதக்கது என முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவையில் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். 


இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:




அவைக்கு ஒரு மகிழ்ச்சியான  செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன். சற்று முன்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நமது தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. இந்த சட்டமன்ற பேரவையில் நாம் நிறைவேற்றி மாண்புமிகு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்த பல முக்கிய சட்ட முன் வடிவுகளுக்கு ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பினார். அந்த நிலையில் அவற்றை நாம் மீண்டும் இங்கே நிறைவேற்றி அனுப்பி வைத்தோம். இரண்டாவது முறை சட்டப்பேரவை நிறைவேற்றிய சட்டம் முன் வடிவுகளுக்கு மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என அரசியல் சட்டம் வரையறுத்து இருந்த போதிலும் இவற்றிற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் அவர்கள் காலம் தாழ்த்தி வந்ததோடு அதற்கு தனக்கு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்து வந்தார். 


இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததில் தமிழ்நாடு அரசின் வாதத்தில் இருந்து நியாயத்தை ஏற்று மாண்புமிகு ஆளுநர் அவர்கள் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது என்றும், அந்த சட்டம் முன் வடிவுகளுக்கும் ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்பட வேண்டும் எனவும் தெரிவித்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை இன்றைக்கு உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது. 


இந்த தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டும் இன்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயரிய கொள்கையான மாநில சுயாட்சி மத்திய கூட்டாட்சி தத்துவம் ஆகியவற்றை நிலை நாட்ட தமிழ்நாடு அரசு போராடுகிறது. தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் எனக் கூறியுள்ளார்.


திக தலைவர் கி.வீரமணி: 


தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அரசியல் சட்டத்தில் விரோதமாக செயல்பட்டு வந்த  ஆர்.என் ரவி ஆளுநராக நீடிக்க கூடாது. தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு சரியானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தனக்கு இல்லாத வீட்டோ அதிகாரம் இருப்பதாக எண்ணி ஆளுநர் ரவி செயல்பட்டு வந்தார் என தி.க தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

10 வருடங்களுக்கு பிறகு‌‌.. ஏப்ரல் மாதத்தில் சென்னையில் பலத்த மழை .. தமிழ்நாடு வெதர்மேன்!

news

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும்: சீமானை அழைத்த நயினார் நகேந்திரன்

news

அதிமுக -பாஜக கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி!

news

முஸ்லிம்கள், இந்து வாரியங்களில் இடம்பெற முடியுமா? .. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

news

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார்.. நீதிபதி பி.ஆர். கவாய்.. மே 14ல் பதவியேற்பு

news

காலை உணவு திட்டம்... உப்புமாவிற்கு பதில் பொங்கலும் சாம்பாரும்... அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!

news

யாரு இவங்களா.. அச்சச்சோ பயங்கரமான ஆளாச்சே.. ரகசியம் காப்பதில் கில்லாடிகள் இந்த 5 ராசிக்காரர்கள்!

news

வருமான வரித்துறை + ராணுவம் + தொல்லியல் துறை + உள்ளூர் மக்கள்... 5 மாதம் நீடித்த புதையல் வேட்டை!

news

இனி தமிழில் மட்டுமே அரசாணை வெளியீடு.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அதிகம் பார்க்கும் செய்திகள்