உன் தியாகம் பெரிது.. உறுதி அதனினும் பெரிது.. ஆருயிர்த் தம்பியே வருக வருக .. முதல்வர் ஸ்டாலின்

Sep 26, 2024,08:12 PM IST

சென்னை:   முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்துள்ளது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 


முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட் இன்று ஜாமின் வழங்கியுள்ளது. இதையடுத்து திமுகவினர் இதை பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் இதை வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள எக்ஸ் தள பதிவு:




ஆருயிர் சகோதரர்  செந்தில் பாலாஜி அவர்களுக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது.  


அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன.


கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள்.  முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன்.


உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது என்று முதல்வர் தெரிவித்தார்.


கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு மேற்கு மண்டலத்தில் மிகப் பெரிய வெற்றி கிடைக்க செந்தில் பாலாஜியின் கடுமையான உழைப்பே காரணம். இதன் காரணமாக செந்தில் பாலாஜிக்கு முதல்வரிடம் செல்வாக்கு அதிகரித்தது.  இந்தச் சூழ்நிலையில்தான் அவர் கைதாகி சிறைக்குப் போய் விட்டார் என்பது நினைவிருக்கலாம். அடுத்து உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ள நிலையில், செந்தில் பாலாஜி விடுதலையாகி வெளியே வருவதால் மேற்கு மண்டல திமுகவுக்கும் இது பலன் தரும் என்று கருதப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுரையில் வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ.11.9 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

news

விஜய்க்கு கோபம் வருவதற்காக தான் அஜித்துக்கு வாழ்த்து கூறுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?: டாக்டர் தமிழிசை

news

Deepavali special.. மொறுமொறுன்னு.. சாப்பிட்டா விறுவிறுன்னு.. ரிப்பன் பூண்டு பக்கோடா!

news

தமிழ்நாட்டில் மழை.. தீபாவளியன்னிக்கு யாருக்கெல்லாம் கன மழை காத்திருக்கு.. லிஸ்ட்டைப் பாருங்க!

news

முத்திரை பதித்த பேரரசர்.. அரசியலின் முக்கிய அடையாளம்.. பசும்பொன் தேவருக்கு விஜய் புகழாரம்

news

டக்குன்னு அஜீத் பக்கம் திரும்பிய உதயநிதி ஸ்டாலின்.. கடகடவென பாலோ செய்த அமைச்சர்கள்!

news

Chennai Rains.. அண்ணாநகரை வச்சு செஞ்ச மழை.. 1 மணி நேரத்தில் 100 மி.மீ.. இது லிஸ்ட்லேயே இல்லையே!

news

Deepavali special sweet: செம டேஸ்ட்டு.. சூப்பர் ஸ்வீட்டு.. தீபாவளிக்கு முந்திரி கேக் செய்யலாமா?

news

ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கம் விலை: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்