சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் மக்களிடம் சென்றடைகிறதா என்பதை அறிய ஒவ்வொரு மாவட்ட வாரியாக கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வரும் முதல்வர் மு க ஸ்டாலின், இன்றும் நாளையும் சிவகங்கை மாவட்டத்தில் ஆய்வு பணியை மேற்கொள்ள இருக்கிறார்.
தமிழ்நாட்டு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் முழுமையாக சென்று சேர்கிறதா என்பது குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மாவட்ட வாரியாக சென்று பணிகளை முடுக்கி வருகிறார். அதே சமயத்தில் பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் வழங்கி வருகிறார் முதல்வர் மு க ஸ்டாலின்.
அந்த வகையில் இரண்டு நாள் பயணமாக, இன்றும் நாளையும் சிவகங்கை மாவட்டத்தில் கள ஆய்வு பணிகளை மேற்கொள்கிறார். இதற்காக இன்று சென்னையில் இருந்து புறப்பட்ட முதல்வர் மு க ஸ்டாலின் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கு அவருக்கு திமுகவினர் அமைச்சர்கள் கே. என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோரது தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் சாலை மார்க்கமாக காரைக்குடிக்கு முதல்வர் புறப்பட்டுச் சென்றார். காரைக்குடி சென்ற பிறகு அழகப்பா பல்கலைக்கழகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது சொந்த நிதியில் கட்டியுள்ள தமிழ் நூலக திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார். அங்கு உரை நிகழ்த்தி விட்டு மாலை 5 மணிக்கு காரைக்குடி பி எல் பி பேலஸில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை வழங்க இருக்கிறார்.
இதனையடுத்து நாளை காரைக்குடியில் இருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக சிவகங்கை செல்கிறார். அங்கு மன்னர் அரசு கல்லூரியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதனை முடித்துவிட்டு மதுரை விமான நிலையம் வந்து அங்கிருந்து சென்னைக்கு புறப்படுகிறார். இதனால் முதல்வரின் வருகையை முன்னிட்டு இன்றும் நாளையும் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!
தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!
சபரிமலையில் நடிகர்கள் கார்த்தி ரவி மோகன் சுவாமி தரிசனம்!
Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?
{{comments.comment}}