2 நாள் பயணமாக.. நாளை டெல்லி செல்கிறார்.. முதல்வர் ஸ்டாலின்.. நிலுவை நிதியை விடுவிக்க கோருவார்

Sep 25, 2024,10:31 AM IST

சென்னை:   தமிழ்நாட்டிற்கான நிலுவை நிதியை விடுவிக்க கோரி இரண்டு நாள் பயணமாக நாளை டெல்லி செல்கிறார் முதல்வர் மு க ஸ்டாலின். பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க வலியுறுத்துகிறார்.


திமுக சார்பில் பவள விழா மற்றும் முப்பெரும் விழா கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி சென்னையில் கொண்டாடப்பட்டது. அப்போது கட்சியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பெரியார் அண்ணா கலைஞர் ஆகியோரின் பெயர்களில் விருதுகளும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. அதேபோல் முதல்வர் மு க ஸ்டாலின் பெயரிலும் விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பவள விழா  காஞ்சிபுரத்தில் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி  நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு க ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் ஒன்று எழுதி உள்ளார். 


டெல்லி செல்கிறேன் - முதல்வர் ஸ்டாலின் கடிதம்




அதில் அவர் கூறியுள்ளதாவது: சென்னையில் திமுக பவள விழா கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் பேரறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ள பவள விழாவில் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். மேலும் பல்வேறு கொள்கைகளை வலியுறுத்தியும் கூட்டணி எதிர்க்கட்சிகளும் கலந்து கொள்ள உள்ளன. மாநிலத்தில் ஆட்சி அதிகாரம் இருந்தாலும் உரிமைக்காக ஒன்றிய அரசுடன் போராட வேண்டியுள்ளது. உரிமைக்கான போராட்டத்தை திமுக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.


தமிழ்நாட்டின் நிதியை கேட்டுப் பெற நாளை இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்ல இருக்கிறேன். அப்போது அங்கு பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க வலியுறுத்த உள்ளேன்.  வரும் 28ஆம் தேதி ராணிப்பேட்டை சிப்காட்டில் 9000 கோடி செலவில் அமைய உள்ள டாடா மோட்டார் கார் நிறுவன உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்ட இருப்பதை முதல்வர் சுட்டிக்காட்டி உள்ளார்.


மேலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் திராவிட மாடல் ஆட்சியின் கொள்கைகள் தற்போது நாடு முழுவதும் வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளது என மு க ஸ்டாலின் பெருமிதமாக கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுரையில் வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ.11.9 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

news

விஜய்க்கு கோபம் வருவதற்காக தான் அஜித்துக்கு வாழ்த்து கூறுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?: டாக்டர் தமிழிசை

news

Deepavali special.. மொறுமொறுன்னு.. சாப்பிட்டா விறுவிறுன்னு.. ரிப்பன் பூண்டு பக்கோடா!

news

தமிழ்நாட்டில் மழை.. தீபாவளியன்னிக்கு யாருக்கெல்லாம் கன மழை காத்திருக்கு.. லிஸ்ட்டைப் பாருங்க!

news

முத்திரை பதித்த பேரரசர்.. அரசியலின் முக்கிய அடையாளம்.. பசும்பொன் தேவருக்கு விஜய் புகழாரம்

news

டக்குன்னு அஜீத் பக்கம் திரும்பிய உதயநிதி ஸ்டாலின்.. கடகடவென பாலோ செய்த அமைச்சர்கள்!

news

Chennai Rains.. அண்ணாநகரை வச்சு செஞ்ச மழை.. 1 மணி நேரத்தில் 100 மி.மீ.. இது லிஸ்ட்லேயே இல்லையே!

news

Deepavali special sweet: செம டேஸ்ட்டு.. சூப்பர் ஸ்வீட்டு.. தீபாவளிக்கு முந்திரி கேக் செய்யலாமா?

news

ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கம் விலை: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்