பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.. தமிழ்நாடு வெள்ள நிலைமை குறித்து நேரில் விளக்கம்

Dec 19, 2023,10:41 PM IST

- மஞ்சுளா தேவி


டெல்லி: வரலாறு காணாத பெருமழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு நிவாரணம் கேட்டு  டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.


இந்த சந்திப்பின்போது முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும் சென்றிருந்தார். பிரதமர் நரேந்திர மோடியை,  அவரது இல்லத்திற்குச் சென்று முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.  இந்த சந்திப்பின்போது தமிழ்நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட பெரு மழை, மிக மோசமான வெள்ளம் குறித்து விளக்கினார். தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதிகளையும், இதர உதவிகளையும் விரைந்து வழங்க வேண்டும் என்றும் அப்போது முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.


தமிழ்நாட்டின் கோரிக்கை தொடர்பான கோரிக்கை மனுவையும் பிரதமரிடம் முதல்வர் அளித்தார். இந்த சந்திப்பு கிட்டத்தட்ட அரை மணி நேரம் நீடித்தது. இதைத் தொடர்ந்து நாளை காலை சென்னை திரும்பும் முதல்வர் மு.க.ஸ்டாலின், 21ம் தேதி தூத்துக்குடிக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.


முன்னதாக இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:


கடந்த மூன்றாம் தேதி மிச்சாங் புயலால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தமிழக அரசின் துரித நடவடிக்கையால் சேதம் தவிர்க்கப்பட்டது. மக்கள் பேராபத்தால் தாக்கப்பட்டனர். மத்திய அரசு சார்பில் அங்கு வந்த குழுவும் மாநில அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது. 


மழை நின்றதும் உடனடியாக நிவாரப் பரணிகளை நாங்கள் தொடங்கியுள்ளோம். மறுநாளே போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. 95 விழுக்காடு மின் இணைப்பு மூன்று நாட்களுக்குள் சரி செய்யப்பட்டது. புறநகரில் நான்கு, ஐந்து நாட்களுக்குள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்துவிட்டனர். தண்ணீரில் மூழ்கி இருந்த மக்களுக்கு தேவையான பொருட்களை கொடுத்தோம். அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து வந்தோம்.




நானே பல்வேறு பகுதிக்கு சென்றேன். 20 அமைச்சர்கள், 500 ஐபிஎஸ் அதிகாரிகள், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் களத்தில் இருந்து பணியாற்றினர். புயலுக்கு பிறகும் புயலுக்கு முன்பும் ,அரசு எடுத்த நடவடிக்கை காரணமாகத்தான் பாதிப்பு குறைந்தது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் உடனடியாக வந்து வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். 


மத்திய அரசின் நான்கு குழுவினர் மாவட்டங்களில் ஆய்வு செய்தனர். வெள்ள நிவாரண நிதியாக 5,000 கோடி ரூபாய் கேட்டு ராஜ்நாத் சிங்கிடம் வலியுறுத்தினேன். பிறகு பிரதமர் மோடிக்கு வெள்ள நிவாரணம் கோரி கடிதம் எழுதினேன். மத்திய அரசு பேரிடர் நிதியிலிருந்து ரூபாய் 450 கோடியை வழங்கி உள்ளது. மக்களுக்கு நிவாரணத் தொகையாக வேளச்சேரியில் ரூபாய் 6 ஆயிரம் வழங்கும் பணியை தொடங்கி வைத்தேன். 


மத்திய  அரசு முழுமையான நிவாரணத் தொகையை கொடுத்தால் தான் மக்களுக்கு நிவாரணத் தொகை கொடுக்க முடியும். எனவே பிரதமரை நேரடியாக சென்று பிரதமரிடம் கோரிக்கைகளை வைக்கலாம் என நினைத்துக் கொண்டிருந்த வேளையில், 17, 18 தேதிகளில் மேலும் நான்கு மாவட்டங்களில் கடுமையான மழை பெய்தது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் கடுமையான மழைப்பொழிவால் பாதிக்கப்பட்டது. இப்பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது.


17ஆம் தேதி கடுமையான மழை பொழியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் ஆய்வு மையம் குறிப்பிட்ட அளவுக்கு  மிக அதிகமாகவே வரலாற்றிலேயே இதுவரை பதியப்படாத அளவிற்கு பதிவானது. காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 95 சென்டிமீட்டர் மழை பதிவானது. அப்பகுதியே வெள்ளக்காடானது. ஓர் ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்து உள்ளது. 8 அமைச்சர்கள், பல்வேறு மீட்பு படையினர் நிவாரணப் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 12653 பேர் மீட்கப்பட்டு 149 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் 


.அவர்களுக்கு மருந்துவ வசதிகள், அடிப்படை வசதிகள் அளித்து வருகிறது. வெள்ளம் சூழ்ந்த மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கி வருகிறோம். சென்னை உட்பட 4 மாவட்ட மக்களை  காக்க எந்த அளவு செயல்பட்டோமோ.. அதே அளவிற்கு நெல்லை ,குமரி, தூத்துக்குடி, தென்காசி, ஆகிய மாவட்ட மக்களை காக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். இந்த மாவட்டத்திற்கும் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணத்தை தமிழ்நாடு அரசு செய்தாக வேண்டும் என்று கூறியிருந்தார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்