சென்னை: மதுரை மற்றும் திருச்சியில் அமைய உள்ள டைடல் பூங்காக்களுக்கான கட்டுமான பணிகளுக்கு இன்று காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் மு க ஸ்டாலின்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கிலும், அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கிலும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
சென்னை, கோவை ஆகிய இடங்களில் டைடல் பார்க் உருவாக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல்வேறு இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்து வருகின்றனர். மதுரையில் வட பழஞ்சி பகுதியில் ஐடி பூங்கா உள்ளது.
தென் மாவட்டங்களை பொறுத்தவரை மதுரை மையப் பகுதியில் அமைந்திருப்பதால் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் ஐடி பணிகளின் தேவைகள் அதிகரித்து வருகிறது. ஏராளமானோர் வீடுகளில் இருந்தே பணிபுரிந்து வருகின்றனர். இதனால் மதுரையில் டைட்டில் பார்க் அமைய வேண்டும் என பல்வேறு தரப்பினரிடையே கோரிக்கை எழுந்தது. இதனை கருத்தில் கொண்டு முதல்வர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் நியோ டைட்டில் பார்க் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.
இதற்காக மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் மற்றும் நெல் வணிக வளாக பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்தமான 9.97 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 52 சதுர அடி பரப்பில் தரைதளத்துடன் 12 மாடி கூடிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 314 கோடியே 29 லட்சத்து 51 ஆயிரத்து 821 கோடி செலவில் மதுரை நியோ டைடல் பார்க் கட்டப்பட உள்ளது. இதன் மூலம் 5500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திருச்சி டைடல் பூங்கா
அதேபோல் திருச்சி டூ மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு அருகில் புதிய டைடல் பார்க் அமைக்கப்பட உள்ளது . சுமார் 14.16 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள 5.58 லட்சம் சதுரடியில் தரை தளத்துடன் ஆறு மாடிகள் கொண்ட புதிய டைடல் பார்க் ரூபாய் 315 கோடி செலவில் கட்டப்பட உள்ளது.இதன் மூலம் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
இந்த நிலையில் மதுரை மற்றும் திருச்சியில் டைட்டில் பார்க் அமைய கட்டுமானப் பணிகள் இன்று முதல் ஆரம்பமாக உள்ளது. மதுரை மற்றும் திருச்சியில் அமைய உள்ள டைடல் பார்க் கட்டுமான பணிகளுக்கு காணொளி வாயிலாக இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் மு க ஸ்டாலின். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு கட்டுமான பணிகள் துவங்க இருக்கின்றன. மேலும் 18 மாதத்திற்குள் கட்டுமான பணிகள் முடிக்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது.
நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி
விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு
யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!
பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா
என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!
இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!
தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?
அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!
தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்
{{comments.comment}}