மாணவர்களிடமிருந்து புது எனர்ஜி கிடைக்கிறது.. கோவையில் ஹேப்பி மோடுக்குப் போன முதல்வர் மு.க.ஸ்டாலின்

Nov 06, 2024,05:34 PM IST

கோவை: அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களிடம் சென்று சேர்கிறதா என்ன கள ஆய்வு பணியை மேற்கொள்வதற்காக கோவை சென்ற முதல்வர் மு க ஸ்டாலின் அங்கு பெரியார் பெயரில் நூலகம் அமைக்க இன்று அடிக்கல் நாட்டினார். இந்த நூலகம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.


திமுக சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அத்திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் முழுமையாக சென்று சேர்ந்ததா என  கள ஆய்வு பணியை மாவட்ட வாரியாக முதல்வர் முக ஸ்டாலின் மேற்கொள்ளவுள்ளார். முதல் கட்டமாக நேற்று இரண்டு நாள் பயணமாக கோவை சென்றார் முதல்வர். கோவையில் நூலகத் திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டினார். அப்போது திமுக அரசின் திட்டங்கள் குறித்து முதல் மு க ஸ்டாலின் கூறியதாவது:


கோவையில் இங்கு கூடியிருக்கும் மாணவர்களை சந்திக்கும் போது எனக்கு புதிய உணர்ச்சியும் எனர்ஜியும் ஏற்படுத்தி இருக்கிறது. சமீப காலத்தில் கோவையில் தான் நான் புதல்வன் திட்டத்தை நான் துவங்கி வைத்தேன். இன்று நூலக அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதை நினைத்து பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். பெருமைப்படுகிறேன். 2021 இல் ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கக்கூடிய நிகழ்ச்சிகளை நான் நடத்தி வைத்திருக்கிறேன். இந்த கோவை மாவட்டத்திற்கு மூன்று முறை நலத்திட்டம் வழங்கக்கூடிய நிகழ்ச்சியில் பங்கெடுத்திருக்கிறேன் அந்த நிகழ்ச்சியில் மாவட்டங்களுக்கான பல்வேறு திட்டங்களை தொடங்கியும்,பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், புதிய திட்டங்களை அறிவிக்கவும் செய்திருக்கிறேன். 2023 தொடக்கத்தில் அந்தத் திட்டங்கள் நிலை குறித்து மண்டலங்கள் வாரியாக அதாவது நான்கைந்து மாவட்டங்கள் உட்படுத்தி ஆய்வுக் கூட்டங்களை நடத்திருக்கிறேன். 



இந்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்ற தேர்தல் வந்தது. தேர்தல் முடிந்ததும் அமைச்சரவை கூட்டத்தை நடத்திக் கடந்த மூன்று ஆண்டுகளில் நாம் அறிவித்த அறிவிப்புகளின் நிலை குறித்து அமைச்சர்கள் அவரவர் துறை ரீதியாக ஆய்வு செய்ய சொல்லி அறிவுறுத்திவிட்டு நம்முடைய தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக நான் அமெரிக்கா பயணம் மேற்கொண்டேன்‌. அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு அமைச்சர்களை சந்தித்து துறை ரீதியான ஆய்வுகளை நடத்தி இருக்கிறேன். இதற்கிடையே மாவட்டங்கள் வாரியாக நேரடியாக நான் ஆய்வு செய்ய வேண்டும் என கூறி நான் தொடங்கிய பயணத்தில் முதல் மாவட்டமாக நான் தேர்ந்தெடுத்தது இந்த கோயம்புத்தூர் மாவட்டம் தான் என்பதை பதிவு செய்து கொள்கிறேன். 


நேற்று காலையில் இங்கு வந்ததிலிருந்து நடைபெற்று வரக்கூடிய பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்திருக்கிறேன். மாவட்டங்கள் முழுவதும் மக்களுக்கு தேவையான கோரிக்கைகளையும் கேட்டு அறிந்தேன். இன்று அதில் ஒரு கட்டமாக மாபெரும் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். இந்த கோவை மாவட்டத்தில் அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த கம்பேக் கொடுத்திருக்கிறார் நமது செந்தில் பாலாஜி அவர்கள். அவர்கள் சிறப்பான வேகமான செயல்பாடுகளை பார்த்து நடுவில் சில தடைகளை ஏற்படுத்தினார்கள். இந்த தடைகள் எல்லாம் உடைத்து மீண்டு வந்திருக்கிறார்.  கோவைக்காக சிறப்பாக செயல்படுவார் செந்தில் பாலாஜி. முத்தமிழ் அறிஞர் கலைஞர் உடைய நூற்றாண்டு விழாவை நாம் சிறப்பாக நடத்தினோம்‌. அதற்காக மதுரையில் மாபெரும் நூலகத்தை அமைத்தோம். தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் இதனை பயன்படுத்தி பயனடைந்து வருகிறார்கள்‌. 


அதேபோல  கோவையிலும் கலைஞர் பெயரால் நூலகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. கோவையில் நூலகம் அமைக்கப்படும் என நான் அறிவித்தேன். அதனைத் தொடர்ந்து நூலகத்துடன் இணைந்து அறிவியல் மையமும் அமைக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. அதனால் சென்னையில் அண்ணா நூலகம் அமைந்துள்ளது. மதுரையில் கலைஞர் அவர்களின் நூலகம் அமைந்துள்ளது. அதேபோல் இவர்கள் இருவரையும் உருவாக்கிய தந்தை பெரியார் பெயரில் நூலகமும் அறிவியல் மையமும் உருவாக்குவது தான் பொருத்தமாக இருக்கும். தொண்டு செய்த பழுத்த பழம் தந்தை பெரியார் அவர்கள். 80 ஆண்டுகளுக்கு முன்பு இனிவரும் உலகம் எப்படி இருக்க வேண்டும் என பகுத்தறிவுடன் கனவு கண்ட ஆசான் அவர்கள்.


இந்த இளைய சமுதாயம் வளர வாழ தந்தை பெரியார் பெயரில் நூலகமும் அறிவியல் மையமும் கம்பீரமாக மிகச் சிறப்பாக எழ இருக்கிறது என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அது மட்டும் இல்லாமல் இந்த அடிக்கல் நாட்டு விழாவில் திறப்பு விழா தேதியையும் நான் அறிவிக்கிறேன். 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த நூலகம் திறக்கப்படும். திராவிட மாடல் அரசை பொறுத்தவரை சொன்னதை செய்யும். நேற்று கூட கோவையில் எல்காட்  நிறுவனம் சார்பில் 114 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தை திறந்து வைத்தேன் அது மட்டுமில்ல இந்த நிகழ்ச்சிக்கு முன்பு கோவையில் அடையாளமாக மாற இருக்க கூடிய செம்மொழிப் பூங்கா பணிகளையும் பார்வையிட்டு தான் இங்கு வந்திருக்கிறேன். 133 கோடியே மதிப்பீட்டில் காந்திபுரத்தில் நமது அரசு உருவாக்கி வரும் அந்த பணிகளும் விரைவில் எடுக்கப்பட்டு ஜூன் மாதம் திறக்கப்படுகிறது. நமது ஆட்சியில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினோம் என்றால் அதை குறிப்பிட்ட காலத்திற்குள் திறந்து வைப்போம் அதற்கு சில எடுத்துக்காட்டுகளை நான் சொல்ல விரும்புகிறேன். 


உயர் சிகிச்சைகள் வழங்கக்கூடிய சென்னையில் அமைந்துள்ள கலைஞர் உயர் சிகிச்சை மருத்துவமனை, உலக தரத்திலான மதுரை கலைஞர் நூலகம், வீர விளையாட்டு ஆன ஜல்லிக்கட்டு காண மாபெரும் விளையாட்டு அரங்கம், கீழடி அருங்காட்சியகம் அந்த வரிசையில் தான் இந்த பெரியார் நூலகமும் இடம்பெறப் போகிறது. இந்த பயணத்தில் நேற்று தமிழ்நாடு வீட்டு வசதி சார்பில் நில எடுப்பு நடவடிக்கைகளை விலக்களிக்கப்பட்ட நில உரிமையாளர்களுக்கு விடுவிப்பு ஆணைகளை வழங்கினேன் இது ஏறத்தாழ 35 ஆண்டுகால பிரச்சனை. நாடாளுமன்ற பரப்புரைக்கு வரும்போது பலபேர் என்னிடம் கோரிக்கை வைத்தார்கள். நான் அதனை மாண்புமிகு அமைச்சர் முத்துசாமி அவர்களிடம் கொடுத்து அதற்கு உடனடியாக நிரந்தர தீர்வு காண வேண்டும் எனக் கூறி நேற்று மட்டும் சுமார் 10,000 குடும்பங்கள் பயன் அடைகின்ற அந்த ஆணைகளை நான் வழங்கி இருக்கிறேன். 




அடுத்ததாக தங்க நகை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் என்னை வந்து சந்தித்தார்கள். அவர்கள் குறைகள் எல்லாம் நேற்று மாலை நான் கேட்டறிந்தேன். நேர் அவர்கள் இருக்கும் இடத்திற்கு நானே நேரடியாக சென்றேன். அவர்கள் என்னிடம் சில கோரிக்கைகளை எடுத்துக் கூறினார்கள் இந்த கோரிக்கைகளை உடனடியாக அதிகாரிகளிடம் கலந்து பேசி இப்போ அவர்களுடைய கோரிக்கைகளை நான் அறிவிக்க போகிறேன். 


உலக அளவில் தங்களுகை தயாரிப்பில் மிக மிக முக்கிய மையமாக விளங்குகிற கோவைக்கு 126 கோடி மதிப்பிற்கு தொழில் வளாகம் கட்டப்படும். என்ஏபிஎல் ஆய்வகம் உள்ளிட்ட எல்லா விஷயங்கள் கொண்ட இந்த வளாகத்தில் 2000 பேருக்கு நேரடியாகவும் 1500 பேருக்கு மறைமுகமாகவோ வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இப்படி பார்த்து பார்த்து நாங்கள் திட்டங்களை செய்து வருகிறோம். இப்ப மட்டுமல்ல கலைஞர் காலத்தில் கோவை மாநிலத்திற்கு நிறைய திட்டங்கள் நிறைவேற்றி வைத்திருக்கிறேன் அதில் சில திட்டங்களை மட்டும் நினைவுபடுத்துகிறேன். இந்தியாவிலேயே முதன் வேளாண்மை பல்கலைக்கழகம் கோவையில் தான் அமைக்கப்பட்டது. கோவை அவிநாசி சாலையில் பாலம், சிறுவாணி கூட்டுக் குடிநீர் திட்டம், பொள்ளாச்சி சாலையில் பாலம், நெய்யல் ஆற்று பாலம், கோவை புறவழிச்சாலை தொடங்கி வைத்த பில்லூரனை இரண்டாம் கட்ட குடிநீர் திட்டம் வடவள்ளி கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம், கோவையில் டைட்டில் பார்க் என சொல்லிக்கொண்டே போகலாம். திராவிட மாடல் ஆட்சியில் மூன்று ஆண்டுகள் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது 


கோவையில் மேலும் ஒரு தகவல் தொழில்நுட்ப வளாகம் அமைக்கப்படும். இந்த வளாகம் 36,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும். கோட்டூர், வேட்டைக்காரன் புதூர், உடையங்குளம் ஆகிய ஊராட்சிகள் மற்றும் ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் 38 கிராமங்களுக்கு பயனளிக்கும் வகையில் 26 கோடி ரூபாய் செலவில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். பொள்ளாச்சி வடக்கு பொள்ளாச்சி தெற்கு மற்றும் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் இயக்கக்கூடிய 295 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கக்கூடிய கூட்டு குடிநீர் திட்டம் ரூபாய் 51 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.


கோவையில் பல ஆண்டுகளாக  புதுப்பிக்கப்படாத சாலைகள், பாதாள திட்ட பணிகளால் பாதிக்கப்பட்ட சாலைகள் அதிக குடியிருப்பு பகுதிக்குள் இருக்கக்கூடிய மண் சாலைகள் இவற்றையெல்லாம் சீர்படுத்த 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இப்படி ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு ஊருக்கும் தேவையான திட்டங்கள் என்ன அந்த வட்டாரத்தின் மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து செயல்படுத்த இருக்கிறோம் என்றார் முதல்வர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நாயகன் மீண்டும் வர்றார்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின்.. செம கேட்ச்தான்!

news

CKS rocks.. அஸ்வின், ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே, ராகுல் திரிபாதி.. செம கேம் பிளான்தான்!

news

A R Rahman.. உலகிலேயே மிகவும் சிறந்த மனிதர் ஏ.ஆர். ரஹ்மான்.. உருக்கமான ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு

news

பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!

news

இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!

news

IPL Auction 2025.. ஐபிஎல் மெகா ஏலம்.. திக் திக் காத்திருப்பில் 577 வீரர்கள்.. செம கிராக்கி யாருக்கு?

news

அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.. தெளிவான முடிவெடுத்த தலைவர் ஜானகி அம்மாள்.. ரஜினிகாந்த்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்