என் அன்பு சகோதரருக்கு...ராகுல் காந்திக்கு உருக்கமாக வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்

Jun 19, 2024,01:05 PM IST

சென்னை: இன்று பிறந்தநாள் கொண்டாடும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்திக்கு,என்னுடைய அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டு தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின்  வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.


காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி  பெற்றார். குறிப்பாக வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு இரண்டிலுமே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதில் தற்போது வயநாடு தொகுதியை ராஜினாமா செய்து விட்டு, ரேபரேலி தொகுதியை மட்டும் வைத்துக் கொள்ள ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.




நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணி 200 க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவதற்கு ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோதா யாத்திரை தான் முக்கிய காரணம் என பேசப்பட்டது. இதனால் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு ராகுல் காந்திக்கு தேசிய அளவில் இருக்கும் செல்வாக்கு கூடி உள்ளது. அந்த உற்சாகத்துடன் இந்த ஆண்டு பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார் ராகுல் காந்தி.


காங்கிரஸ் எம்.பியும் ,இந்தியா கூட்டணியின் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது 54 வது பிறந்தநாளை இன்று(ஜுன் 19) சிறப்பாக கொண்டாடி வருகிறார். இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில்  முதல்வர் மு க ஸ்டாலின், சோஷியல் மீடியா வழியாக ராகுல் காந்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு கூறுகையில், என்னுடைய அன்பு சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.நம் நாட்டு மக்களுக்கான உங்களின் அர்ப்பணிப்பு உங்களை உயரத்திற்கு அழைத்துச் செல்லும்.  நீங்கள் தொடர்ந்து முன்னேறவும் வெற்றியடையவும் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்