அமைச்சரவையில் மாற்றமா.. எனக்கே தகவல் இல்லையே.. முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்ட போடு!

Aug 22, 2024,06:53 PM IST

சென்னை :   தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதுகுறித்து தனக்கே தகவல் இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நகைச்சுவையாக கூறியுள்ளார்.


முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 27ம் தேதி அமெரிக்காவுக்கு பயணிக்கவுள்ளார். பல நாட்கள் அங்கு தங்கவுள்ளார். முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பான சந்திப்புகளில் அவர் பங்கேற்கிறார். நீண்ட நாட்கள் அவர் அமெரிக்காவில் தங்கவுள்ளதால் அவர் வரும் வரை அவரது முதல்வர் பொறுப்பை யாரிடமாவது கொடுக்க வேண்டும். இதையும் மனதில் வைத்து மேலும் சில அமைச்சர்களை மாற்றும் வகையில் அமைச்சரவை மாற்றம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.




இன்று வெளியான தகவலின் படி, ஒரு மூத்த அமைச்சர் மற்றும் 2 அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட உள்ளதாகவும், அவர்களுக்கு பதிலாக மூன்று புதிய முகங்கள் அமைச்சரவையில் இடம்பெற உள்ளதாகவும் தகவல் கூறுகின்றன.  சிலரது இலாகாக்கள் மாற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில் இதுகுறித்து இன்று முதல்வரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்துக் கேட்டனர். அதற்கு முதல்வர் சிரித்துக் கொண்டே, எனக்கு தகவல் வரலை என்று அதிரடியாக கூறினார். 


கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவை மாநில அரசுதான் நடத்தியதாக மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கூறியது குறித்த கேள்விக்கு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த நிகழ்வை மாநில அரசு நடத்தியதாக விளக்கம் அளித்தார் முதல்வர் ஸ்டாலின்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

அதிகம் பார்க்கும் செய்திகள்