இது அனைவருக்குமான அரசு.. ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் யாராக இருந்தாலும் விட மாட்டோம்.. முதல்வர் ஸ்டாலின்

Jul 09, 2024,09:20 PM IST

சென்னை:   தமிழகத்தில் உள்ள திமுக அரசு, அனைவருக்குமான அரசு. அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கும் அரசு. ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் உறுதியாக உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இன்று அவரது இல்லத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியைச் சந்தித்து ஆறுதல் கூறினார். கொலையாளிகளையும், கொலைக்குப் பின்னால் உள்ளோரையும் உரிய முறையில் தண்டிக்கப்படுவார்கள் என்று அப்போது அவர் பொற்கொடியிடம் தெரிவித்தார்.




பின்னர் இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களது மறைவையொட்டி, அவரது இல்லத்துக்குச் சென்று அவரது திருவுருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி, துயரில் வாடும் அவரது மனைவி பொற்கொடி அவர்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன்.


கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்று சகோதரி பொற்கொடிக்கு உறுதி அளித்தேன். கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது.


இது அனைவருக்குமான அரசு. அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கும் அரசு, நீதியை நிச்சயம் நிலைநாட்டும்! காவல்துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமையை ஆற்றும் என்று முதல்வர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

மாணவியர் விடுதி கட்டுவதற்கு பதிலாக தோழி விடுதி கட்டுவதா?: டாக்டர் ராமதாஸ் கேள்வி!

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.200 குறைவு!

news

அமைச்சர் கே.என் நேருவின்..மகன், தம்பி வீடுகளில்.. அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 07, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக .. எம்.ஏ. பேபி தேர்வு!

news

தமிழ்நாட்டு மண்ணில் பிரதமர் மோடி உறுதி தர வேண்டும்.. ஊட்டியிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

news

நவீன பாம்பன் கடல் பாலம்.. நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.. புதிய ரயிலுக்கும் பச்சைக் கொடி!

news

அமைச்சர் நிர்மலா சீதாராமனை நான் சந்திச்சேனா.. நாம் தமிழர் தலைவர் சீமான் திட்டவட்ட மறுப்பு!

news

Tamil Nadu rains.. இன்னும் 10 நாட்களுக்கு மழைதான்.. தமிழ்நாடு வெதர்மேன் ஹேப்பி நியூஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்