"ஸ்பெயின் வந்துட்டேன்..  முதலீடுகளை ஈர்க்கவுள்ளேன்".. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஹேப்பி டிவீட்!

Jan 29, 2024,06:07 PM IST

சென்னை:  ஸ்பெயின் நாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்து சேர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் மகிழ்ச்சிகரமான டிவீட் ஒன்றையும் போட்டுள்ளார்.


தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறை பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள முதல்வர், ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் இன்று பங்கேற்கிறார்.


இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறை பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு 27. 1. 2024 அன்று இரவு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து புறப்பட்டு நேற்று மாலை ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மெட்ரிக் சென்றடைந்தார்.




ஸ்பெயின் சென்றடைந்த முதலமைச்சர் ஸ்டாலினை ஸ்பெயின் நாட்டிற்கான இந்திய தூதர் தினேஷ் கே.நாயக் தூதரக அதிகாரிகளோடு மலர் கொத்து வழங்கி வரவேற்று சந்தித்து பேசியபோது ஸ்பெயின் பயணம் வெற்றி பெறுவதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு அரசு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டிஆர்பி ராஜா உடன் இருந்தார்.


ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் இன்று நடத்த உள்ளார். இம்மாநாட்டில் தமிழ்நாட்டில் நிலமும் சாதகமான முதலீட்டு சூழல் பற்றியும் தமிழ்நாட்டின் கட்டமைப்பு வசதிகள் மனிதவள ஆற்றல் போன்றவற்றின் சிறப்பு அம்சங்களை விலக்கி தமிழ்நாட்டில் முதலீடுகளை பெருமளவில் ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஸ்பெயின் வந்தடைந்தேன் - முதல்வர் பெருமித டிவீட்




தனது ஸ்பெயின் பயணம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டுள்ள டிவீட்டில், ஸ்பெயின் வந்தடைந்தேன்.

ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஐரோப்பியப் பயணம்.  இந்திய தூதர் தினேஷ் பட்நாயக்

அவர்கள் தூதரக அதிகாரிகளுடன் சிறப்பான வரவேற்பை அளித்தார்.


இன்று மாலை ஸ்பெய்ன் நாட்டின் தொழில் அமைப்புகள் மற்றும் அந்நாட்டில் செயல்படும் பெரும் தொழில்  நிறுவனங்களைச் சந்திக்கிறேன். தமிழ்நாட்டில் நிலவும் வாய்ப்புகள் மற்றும் இளைஞர் வளத்தை எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்க்கவுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.


நடுவானில் டென்னிஸ் வீரருடன் சந்திப்பு




இதற்கிடையே, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டுக்குப் பயணித்தபோது விமானத்தில் ஒரு சுவாரஸ்யமான சந்திப்பு நடைபெற்றது.


அதாவது முதல்வர் பயணித்த அதே விமானத்தில்தான் பிரபல டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிக்கும் பயணித்துள்ளார். அப்போது இருவரும் சந்தித்து கை குலுக்கிப் பேசிக் கொண்டனர். பின்னர் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட  புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்