சென்னை: அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு வைத்து இயக்குநர் மாரி செல்வராஜின் வாழை படத்தைப் பார்த்துள்ளார். இதுதொடர்பாக இயக்குநருக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம்தான் வாழை. இது தனது சிறு வயது வாழ்க்கையின் தொகுப்பு என்று இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. இப்படத்தில் மாரி செல்வராஜ் சித்தரித்துள்ள காட்சிகளும், கதாபாத்திரங்களும் பேசு பொருளாகியுள்ளன.
இந்த நிலையில் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு வைத்து வாழை படத்தைப் பார்த்து ரசித்தார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் போட்டுள்ள பதில் கூறியுள்ளதாவது:
உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் #வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி இயக்குநர் மாரி செல்வராஜுக்ுக அன்பின் வாழ்த்துகள்.
பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி!
பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்!
தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு மீண்டும் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
முதல்வருக்கு மாரி செல்வராஜ் நன்றி
இதற்கிடையே, தனது வாழை படம் பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், என் முதல் படமான பரியேறும் பெருமாளிலிருந்து கர்ணன் மாமன்னனை தொடர்ந்து இன்று வாழை வரை என் அத்தனை படங்களையும் பார்த்துவிட்டு உடனே அழைத்து பெரும் ப்ரியத்தோடு என் படைப்பையும் என் உழைப்பையும் பெரும் நம்பிக்கையோடு கொண்டாடி வரும் தமிழக முதல்வர் மாண்புமிகு ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026ல் சட்டமன்ற தேர்தல்.. நாலே கூட்டணிதான்.. விறுவிறுப்பாகும் கட்சிகள்.. பரபரக்கும் அரசியல் களம்!
தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு.. வானகரம் விழாவில் அறிவிப்பு!
பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன்.. அமைச்சர் பொன்முடி!
என்னை யாரும் சந்திக்க வர வேண்டாம்... டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
அதிமுக கூட்டணி அறிவிப்பு.. முதல்வர் மனதில் இடிபோல இறங்கியுள்ளது.. எடப்பாடி பழனிச்சாமி
தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருப்பதால்.. கூட்டணி குறித்து யோசித்து முடிவு எடுப்போம்.. பிரேமலதா
பாஜக திமுக மறைமுக கூட்டணி அம்பலமாகிவிட்டது.. தவெக தலைவர் விஜய்
அதிமுக- பாஜக கூட்டணி.. தோல்வி கூட்டணி.. முதல்வர் மு.க ஸ்டாலின் கடும் விமர்சனம்!
பொன்முடி பேச்சு.. ஏப்., 16ம் தேதி அதிமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிச்சாமி!