மாரடைப்பு வந்ததும்.. பஸ்ஸை ஓரமாக நிறுத்தி உயிரை விட்ட ஸ்கூல் பஸ் டிரைவர்.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Jul 26, 2024,05:14 PM IST

சென்னை:   தனக்கு மாரடைப்பு ஏற்பட்ட போதிலும் வாகனத்தை சாலையோரம் நிறுத்தி விட்டு பள்ளி குழந்தைகளை காப்பாற்றி உயிரிழந்த தனியார் வாகன ஓட்டுநர் சேமலையப்பன்  குடும்பத்திற்கு 5 லட்சம் நிதி உதவி அளித்து முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இவரின் இந்த மனித நேய செயலை பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.


திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சத்யா நகரில் வசித்து வருபவர் சேமலையப்பன். இவர் காங்கேயம் சுமை தூக்குவோர் நல சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். அதே சமயம் வெள்ளகோவில் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இதே வேனில் மனைவி லலிதாவும் உதவியாளராக பணிபுரிகிறார்.  24ஆம் தேதி மாலை பள்ளி முடிந்த பிறகு மாணவர்களை அழைத்துச் செல்லும் போது பழைய போலீஸ் குடியிருப்பு அருகே வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென சேமலையப்பனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. 




அப்போது வேனில் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்துள்ளனர். உடனே தன்னுடைய சாதுரியமான புத்தியால் வேனில் உள்ள  மாணவர்களுக்கு எதுவும் நேரிடக்கூடாது என நினைத்து மிகவும் சிரமப்பட்டு வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு உயிரிழந்தார். இதை கண்ட மாணவர்கள் மற்றும் மனைவி லலிதா அலறி துடி துடித்தனர். பின்னர் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வேனில் இருந்த சேமலையப்பனை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  இவரை பரிசோதித்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 


தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு இறக்கும் தருவாயில் இருந்தும், பள்ளி குழந்தைகளுக்கு எதுவும் நடக்கக்கூடாது என எண்ணி அவர்களின் உயிரை காப்பாற்றி விட்டு உயிரிழந்த சேமலையப்பனின் செயலை பலரும் வியந்து அவரின் மனிதநேய செயலை பாராட்டி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் சேமலையப்பன் வேனில் உயிரிழந்த புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து அவரின் மனிதநேயமிக்க செயலுக்கு சல்யூட் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இந்த நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் பள்ளி குழந்தைகளை காக்க  தன்னுயிர் நீத்த திரு. சேமலையப்பன்  குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கூறி பொது நிவாரணத் நிதிலிருந்து 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். அந்த நிதியை, அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் சேமலையப்பன் குடும்பத்தினரிடம் வழங்கினார்.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்