சென்னை: இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களின் நியாயமான உரிமைகளை பாதுகாக்கவும், ஒன்றிய மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும், உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி ஜோசப் குரியன் அவர்களின் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. இதன் உறுப்பினர்களாக இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான அசோக் வரத ஷெட்டியும், தமிழ்நாடு திட்டக்குழுவின் மேனாள் பேராசிரியர் மு. நாகநாதன் அவர்களும் இருப்பார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
2025 -26 ஆம் நிதி ஆண்டுக்கான மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இடையில் ஐந்து நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று காலை சரியாக 9:30 மணிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியது. கேள்வி நேரம் தொடங்கி சட்டமன்ற உறுப்பினர்கள் அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட கோரிக்கைகளை கேள்வியாக முன்வைத்தனர். அதற்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து முதல்வர் மு.க ஸ்டாலின் மாநில சுயாட்சி தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்ததாவது:
நம் நாட்டு மக்களின் நலன்களை போற்றிப் பாதுகாக்கும் வகையில் அதற்கான அரசியல் அமைப்பையும், நிர்வாக அமைப்பையும் அண்ணல் அம்பேத்கரின் நிர்வாகத் தலைமையில் உருவாக்கி ஒற்றை தலைமை கொண்ட நாடாக இல்லாமல் கூட்டாட்சி கருத்தியல் நெறிமுறைகளை கொண்ட மாநிலங்களின் ஒன்றியமாக உருவாக்கினார் என்பதை மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அறிவார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் மாநிலங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு மாநில மக்களின் அடிப்படை உரிமைகளையே ஒன்றிய அரசிடம் போராடி பெற வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறோம் என்பதை மிக வேதனையுடன் பதிவிட்டு கொள்கிறேன்.
பறந்து விரிந்த இந்த இந்திய நாட்டை மொழிவாரி உரிமைகளான அடிப்படையில் உருவான மாநிலங்கள் தான் ஒற்றுமையாக காத்து வருகின்றன. இப்படி அமைக்கப்பட்ட மாநிலங்கள் அனைத்து அதிகாரங்களையும் ஒற்றுமையாக விளங்கினால்தான் மாநிலங்கள் வளர்ச்சி அடையும், இந்தியாவும் வலிமை பெறும். இதனை உணர்ந்து மாநில சுயாட்சி மத்திய கூட்டாட்சி என்கின்ற பரந்து பெற்ற கொள்கை முழக்கத்தினை தமிழ்நாடு தொடர்ந்து உரக்க முழங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே எந்த மாநிலமும் முயற்சி எடுக்காத நிலையில் ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலத்திற்கு முன்பே 1969 ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற தலைவர் கலைஞர் அவர்கள் ஒன்றிய மாநில அரசுகளின் உறவை ஆராயும் பொருட்டு ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ராஜ மன்னார் அவர்களின் தலைமையில் உயர் மட்ட குழுவினை அமைத்தார்.
நாட்டிலேயே முதல் முறையாக ஒன்றிய மாநில அரசுகளின் உறவு குறித்து விரிவான ஆய்வு செய்து 1971 ஆம் ஆண்டு ராஜமன்னார் தலைமையிலான அறிக்கை வழங்கியது. அந்த குழுவின் முக்கிய பரிந்துரைகளை 51 ஆண்டுகளுக்கு முன்னர் 1974 ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் நாள் இதே சட்டமன்றத்தில் தீர்மானமாக கலைஞர் நிறைவேற்றினார். இதனைத் தொடர்ந்து ஒன்றிய மாநில அரசியலுக்கு இடையேயான உறவை வலுப்படுத்திட ஒன்றிய அரசின் சார்பில் 1983 ஆம் ஆண்டு சர்க்காரியா தலைமையிலான ஆணை 2004 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதி மூர்த்தி தலைமையிலான குழு அமைக்கப்பட்டு அவற்றின் சார்பில் ஆயிரக்கணக்கான பக்கங்களை கொண்ட அறிக்கைகள் வழங்கப்பட்டும், இதுநாள் வரையிலும் எந்தவித மாற்றமும் இன்றி ஏமாற்றத்துடன் தொடர்கிறது. அடுத்தடுத்து மாநில பட்டியல்களில் உள்ள முக்கிய அதிகாரங்களான மருத்துவம், சட்டம் ஆகியவற்றை ஒத்திசைவு பட்டியலுக்கு மடைமாற்றம் செய்யும் பணிகளை விரைவாக இன்று ஒன்றிய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சமூக நீதி பொருளாதார ஏற்றத்தாழ்வின்மை, ஒடுக்கப்பட்டவர்களுக்கான வாய்ப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு மாநில கல்விக் கொள்கையின் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் தமிழ்நாட்டு மாணவியர்கள் பங்கேற்பதை உறுதி செய்யும் வண்ணம் இருந்திருந்த முழுமையான ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் நீட் என்னும் ஒற்றைத் தேர்வு வாயிலாக மட்டுமே மருத்துவ இடங்களை நிரப்பும் முறைக்கு மாற்றப்பட்டுவிட்டது.
இந்த நீட் தேர்வு ஒரு சாராருக்கு மட்டுமே பயனுள்ளதாகவும், பயிற்சி மையங்களை ஊக்குவிக்கும் வண்ணமும் கிராமப்புற மற்றும் பொருளாதார பின் தங்கிய மாணவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது. இந்த நீட் தேர்வின் காரணமாக பல மாணவர்களின் மருத்துவ கனவுகள் சிதைந்து போகின்றன. பல மாணவர்களின் விலைமதிப்பில்லா உயிர்களை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறோம். அந்த நூற்றாண்டுக்கு மேலாகவே நாட்டிலேயே தலைசிறந்த மருத்துவர் களை தொடர்ந்து உருவாக்கி வரும் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளை நாட்டின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி பலவும் உலக நாடுகளில் இருந்தும் உயர்தர சிகிச்சைகளைப் பெற மக்கள் வருகை தந்த வண்ணம் இருக்கிறார்கள் என்பதை நான் சுட்டிக் காட்டு விரும்புகிறேன்.
நாட்டிலேயே தலைசிறந்த மருத்துவர்களையும் உயர்தர மருத்துவமனைகளையும் முன்னணி மருத்துவ கல்வி நிறுவனங்களையும் கொண்ட தமிழ்நாட்டில் தரமான கல்விகளை கொடுக்கப் போகிறோம் என்ற பெயரில் நீட் தேர்வு மூலம் பொதுக் கல்வி முறையை சேர்ப்பதை நாம் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். இந்த நீட் தேர்வால் ஏற்படும் இன்னல்களை களையும் பொருட்டு இந்த சட்டமன்ற பேரவையால் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட சட்டத்திற்கு ஒப்புதல் மறுக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாநில பட்டியலில் இருந்த கல்வி ஒத்திசைவு பட்டியலுக்கு ஒன்றிய அரசால் மாற்றம் செய்யப்பட்டதால் தேசியக் கல்விக் கொள்கை 2020 மூலம் மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிக்க ஒன்றிய அரசால் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்ற போர்வையில் இந்தி மொழியை ஒன்றிய அரசு மறைமுகமாக தமிழ்நாட்டு மாணவர்களுக்கு திணிக்க முற்படுகிறது.
கல்விக் கொள்கையில் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்கால நலனை மட்டுமே முதன்மையாக கருதும் திராவிட மாடல் அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு விடுக்க வேண்டிய சுமார் 2152 கோடியை விடுவிக்காமல் தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை வஞ்சித்து வருகிறது. இவ்வாறு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களுக்கு இத்திட்டத்திற்கு ஏற்கனவே ஒப்புதல் கொடுக்கப்பட்ட நிதியை வழங்காமல் நாடாளுமன்ற நிலைக் குழுவில் கடுமையான கண்டனங்களை ஒன்றிய அரசுக்கு தெரிவித்துள்ளது என்பதை இம்மாம் மன்றத்திற்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
எனவே மொழி, இன, பண்பாடு, ஆகியவற்றை தனித்தன்மையை உறுதி செய்யும் வண்ணம் கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு சேர்க்க வேண்டியது இன்றியமையாததாகும் என்பதை மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வீர்கள் என்பதை நான் நம்புகிறேன்.
ஒன்றிய நிதிக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கும் நிதியானது தமிழ்நாடு போன்ற பொருளாதாரத்தில் முன்னணி வகிக்கும் மாநிலத்தின் பங்களிப்பிற்கு ஈடாக இல்லாமல் குறைவாக பகிரப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டபோது அதன் அறிமுக நிலையிலேயே தனது எதிர்ப்பை பதிவு செய்த மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்று. எனினும் பொருளாதாரத்தில் முன்னேறிய மாநிலங்களின் கருத்துக்களை புறந்தள்ளிவிட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி உற்பத்தி துறையில் திறந்து விளங்கும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளது.
மிக முக்கியமாக மாநிலங்களின் வருவாய் ஈட்டக்கூடிய அதிகாரம் பறிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக விளங்கிய ஒன்றிய அரசின் வரி வருவாயில் பெரும் பங்களிப்பை தமிழ்நாடு தரும் போதிலும் நாம் பங்களிக்க கூடிய ஒரு ரூபாய் வரியில் 29 பைசா மட்டுமே நமக்கு நிதி பகிர்வாக அளிக்கப்படுகிறது. இது மிக மிக குறைவு. இயற்கை சீற்றங்களினால் தமிழ்நாடு பாதிக்கப்பட்ட போதெல்லாம் கூட உரிய இழப்பீடுகள் தகுந்த ஆய்வு அளவீடுகள் செய்த பின்னரும் பலமுறை வலியுறுத்தியும் வழங்கப்படவில்லை. இந்த நேரத்தில் இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைத்த தந்த அண்ணல் அம்பேத்கரின் கருத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி மாநில அரசின் தீவிரம் மக்கள் தொகையின் கட்டுப்பாடு விழிப்புணர்வு நடவடிக்கைகளின் மூலம் பிறப்பு விழுக்காடுகள் கட்டுப் படுத்தப்பட்டு சீரமைக்கப்பட்ட நிலையில் அதனை தண்டிக்கும் விதமாக 2026 ஆம் ஆண்டு நடைமுறைப்பட இருக்கின்ற நாடாளுமன்ற தொகுதியின் மறுவரையறை தமிழ்நாட்டு பிரதிநிதித்துவம் வெகுவாக குறைக்கப்படுவது போன்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.
கூட்டாட்சி கருத்தியலுக்கு எதிராக ஒன்றிய அரசு நடந்து கொள்வதெல்லாம் அதற்கு எதிராக தமிழ்நாடு தொடர்ந்து எதிர்வினையை ஆற்றி வருகிறது. இந்த பிரச்சனைகளை குறித்து மக்கள் மன்றத்தில் விரிவாக எடுத்துக் கூறி தேவைப்பட்டால் சட்டமன்ற தேர்தல் அதற்குரிய தீர்வை எட்டுவதற்கு உரிய சட்டங்களை இயற்றிடவும் நாம் என்றும் தயங்கியதே இல்லை. இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் நான் இயற்றிய சட்ட முன்வடிவு மீது உரிய ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்திய நம் தமிழ்நாடு ஆளுநர் செயலை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடுத்து சமீபத்தில் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவில் அனைத்து மாநிலங்களின் உரிமைகளை காக்கும் வகையில் கருத்தியல் மகத்துவத்தை நாடெங்கும் பரப்பப்படும் வகையில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நாம் பெற்றிருக்கிறோம்.
மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதில் மாநிலங்களின் பங்கு முழுமையானது. அதற்கு ஒன்றிய அரசு உரிய ஆதரவை வழங்க வேண்டும். இதன் அடிப்படையில் இந்திய திருநாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் மிகப்பெரும் பொறுப்பை மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். கல்வி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி, நகர்ப்புற மேம்பாடு, என அனைத்தையும் மாநிலங்கள் முன்னெடுத்து செல்கிறது. ஆனால் அவற்றையெல்லாம் நிறைவேற்றிட தேவையான அதிகாரங்கள் மாநிலங்களிடமிருந்து பறிக்கப்பட்டு ஒன்றிய அரசிடம் குவிக்கப்பட்டு வருகின்றன.
பசியால் வாடி தவிக்கும் குழந்தைகளுக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்பது அந்த குழந்தையின் தாய்க்கு தான் தெரியும். ஆனால் அந்த குழந்தை உண்ணும் உணவை கற்கும் கல்வியை கடந்து செல்லும் பாதையினை யாரோ ஒருவர் தீர்மானித்தால் கருணையே உருவானதாய் பொங்கி எழுத்தான செய்யும். தொடர்ந்து மாநிலங்களின் உரிமை பறிக்கப்பட்டு வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் கூட்டாட்சி கருத்தியலை வலியுறுத்தும் வழியில் ஒன்றிய மாநில அரசுகள் அதற்குரிய கொள்கைகளை மேம்படுத்திடவும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதி கூறுகிறது. நடைமுறையில் உள்ள சட்டங்கள் ஆணைகள் ஆகியவற்றை அனைத்து நிலைகளிலும் ஆராய்ந்து மறுமதிப்பீடு செய்யவும், அதற்கான நடவடிக்கைகளை அரசுக்கு பரிந்துரை செய்யவும், உயர்மட்ட அளவிலான குழுமங்களை அமைப்பது மிக மிக அவசியமாக உள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களின் நியாயமான உரிமைகளை பாதுகாக்கவும், ஒன்றிய மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும், உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி ஜோசப் குரியன் அவர்களின் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. இதன் உறுப்பினர்களாக இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான திரு அசோக் வரத செட்டி அவர்களும் தமிழ்நாடு திட்டக்குழுவின் மேனாள் பேராசிரியர் மு. நாகநாதன் அவர்களும் இருப்பார்கள். இந்த உயர்நிலைக் குழு பின்வரும் கொள்கை குறித்து ஆய்வு செய்து நடத்தும் என்று அறிவிக்கிறேன்.
ஒன்றிய மாநில அரசுகளின் ஒப்புதல் நிலைகளின் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளையும் நடைமுறையில் உள்ள சட்டங்கள் கொள்கைகள் ஆணைகள் போன்றவற்றின் நிலைப்பாடுகளை உயர் மட்ட குழு ஆராய்ந்து மறு மதிப்பீடு செய்தல், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தற்போதையுள்ள விதிகளை உயர்நிலைக் குழு ஆராய்ந்து காலப்போக்கில் மாநில பட்டியலில் இருந்து ஒத்துசைவு பட்டியலுக்கு நகர்த்தப்பட்டதை மீட்டெடுக்கக்கூடிய வழிமுறைகளை பரிந்துரை செய்தல், மாநிலங்கள் நல்லாட்சி வழங்குவதில் உள்ள சவால்களை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை பெறுதல், நாட்டின் ஒற்றுமை மற்றும் நிர்வாக துறைகளிலும் நீதிமன்ற கிளைகளிலும் மாநிலங்களின் அதிகபட்ச தன்னாட்சி உரிமை பெற்றிட உரிய நடவடிக்கைகளை பரிந்துரை செய்தல், உயர்நிலைக் குழு இடைக்கால அறிக்கையை ஜனவரி மாத இறுதிக்குள், இறுதி அறிக்கையை இரண்டு ஆண்டுகளிலும் அரசு வழங்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று முதல்வர் தெரிவித்தார்.
மாநில உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து ஆராய ஜோசப் குரியன் தலைமையில் குழு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
அதிமுக பொதுக்குழு கூட்டம் மே 2ல் நடைபெறும்:எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!
நெல்லையில்.. சக மாணவரை வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது? டாக்டர். அன்புமணி
தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில்..பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு..!
ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்!
இந்தியில் வெளியாகியுள்ள 'ஜாட்' திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
கோடை விடுமுறையை முன்னிட்டு.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க எஸ்இடிசி முடிவு..!
சித்திரை திருவிழாவுக்கு வாருங்கள்.. அன்போடு அழைக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்!
பாமகவில் உட்கட்சி பூசல்கள் சரியாகி விட்டது.. கௌரவத் தலைவர் ஜி கே மணி தகவல்
{{comments.comment}}