சென்னை: தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 3.0 வை, இன்று முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது சிறப்புரையாற்றிய முதல்வர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும். இதற்கான புதிய கொள்கையை தமிழ்நாடு அரசு விரைவில் அறிவிக்க உள்ளது என தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றம் உலகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த காலநிலை மாற்றத்தால் தற்போது அதீத மழை, நிலச்சரிவு, புயல், நில அதிர்வு, என இயற்கை மாறுதல்கள் உருவாகி மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளையும் நோய் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. இதனால் மக்கள் பல்வேறு மக்கள் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கத்தை குறைக்கவும் வழிவகை செய்துள்ளது. இதற்காக தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழக இயக்கம், மற்றும் சதுப்பு நிலை இயக்கம் என மூன்று பிரிவுகளை உருவாக்கியுள்ளது.
சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை சார்பில் இன்றும் நாளையும் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் செயல்படுத்தப்படும் இந்த காலநிலை மாற்ற நிர்வாக குழுவில் பல்துறை வல்லுனர்கள் மற்றும் பல்துறை மூத்த அரசு செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் காலநிலை உச்சி மாநாட்டை 3.0 முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அப்போது சுற்றுசூழல் விருதுகள் மற்றும் மேலாண்மை விருதுகளை வழங்கினார். கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான இணையதளம், தொழிற்சாலை பசுமை குறியீடு என பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
பின்னர் சிறப்புரையாற்றிய முதல் மு க ஸ்டாலின் கூறுகையில், காலநிலை மாற்றம் தான் இன்று உலக நாடுகளும் மானுட சமுதாயமும் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால்கள்.அதனால் தான் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் உடன் அதனை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளையும் தொடர்ந்து செய்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக எனது தலைமையில் செயல்படும் காலநிலை நிர்வாகக் குழுவை உருவாக்கியுள்ளோம். காலநிலை மாற்றம் குறித்து ஆராய முறை முதல்முறையாக இந்தியாவிலேயே காலநிலை மாற்றம் குறித்து மாநாடு நடத்தியது தமிழ்நாடு மட்டும்தான். காலநிலை மாற்றம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.
வயநாடு நிலச்சரிவு, நிலச்சரிவை யாராலும் மறக்க முடியாது. அதேபோல் நம்ம மாநிலத்திலும் திருவண்ணாமலையில் மிகச் சிறிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இப்படி வேறு வேறு மாநிலத்தில் விபத்துக்கள் ஏற்பட்டாலும் இவை அனைத்திற்கும் காலநிலையில் ஏற்பட்ட மாற்றம் தான் காரணம். அதனை நாம் எதிர்கொள்ள வேண்டும். காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு மிகவும் அவசியம். அனைத்து மக்களும் காலநிலை மாற்றம்னா என்ன..? அதன் விளைவுகள் என்ன..? அதை எப்படி எதிர்கொள்வது..? என்பது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இதனால் காலநிலை குறித்து கல்வித்துறை மூலமாகவே புகுத்த நமது அரசு திட்டமிட்டுள்ளது. நமது தமிழ்நாட்டின் எதிர்கால கனவுகளுக்கெல்லாம் கல்விதான் அடிப்படையாக உள்ளது. அதனால்தான் நமது அரசு காலநிலை மாற்றத்தை ஒரு இயக்கமாகவே நடத்த முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும்.காலநிலை அறிவு கல்விக்கென ஒரு கொள்கையை தமிழ்நாடு அரசு விரைவில் அறிவிக்க உள்ளது. எல்லோருக்கும் காலநிலை தொடர்பான விழிப்புணர்வை மாணவர்கள் மூலமாகவே அனைத்து தரப்பு மக்களிடையே கொண்டு போய் சேர்க்க இருக்கிறோம்.
பல்வேறு துறை அரசு அதிகாரிகளுக்கும் காலநிலை மாற்றம் குறித்த திறன் பல பயிற்சிகளை வழங்க இருக்கிறோம். காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் வேளாண்மை நீர் வளத்துறைக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும்.வெப்ப அலையை தணிக்க குடிநீர் பந்தல்கள் அமைத்து மாநில பேரிடர் நிதியை பயன்படுத்த அனுமதித்துள்ளோம். வெப்ப அலையை மாநில பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது என்றார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தொடர் உச்சத்தில் தங்கம் விலை... சவரன் 63,000த்தை கடந்து புதிய உச்சம்!
சாம்சங் நிறுவனத்தில் மீண்டும் சர்ச்சை,3 தொழிலாளர்கள் சஸ்பெண்ட்..தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
ஈரோடு கிழக்கு.. படு விறுவிறுப்பாக நடைபெறும் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு.. மக்களிடையே ஆர்வம்
ட்ரெய்லர் மட்டுமே பார்த்துவிட்டு.. இதுதான் என யூகிக்க வேண்டாம்.. விடாமுயற்சி நடிகை.. ஓபன் டாக்..!
ஓம் சரவணபவ.. வாழ்வில் வளம் பெற தை கிருத்திகை விரதம்.. பிப்ரவரி 6.. மறவாதீர்கள்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் பிப்ரவரி 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்.. எல்லோருக்கும் லீவு .. மறக்காம ஓட்டுப் போடுங்க.. கலெக்டர் அழைப்பு!
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் சூழல் மன்றங்கள்.. விரைவில் கொள்கை முடிவு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
No Uppuma.. பிரியாணியும் சிக்கன் பிரையும் வேணும்.. கலகலக்க வைத்த கேரள சிறுவன்.. அமைச்சர் சொன்ன பதில்
{{comments.comment}}