மழை வரப் போகுது.. பொதுமக்களே இதை பாலோ பண்ணுங்க.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

Oct 14, 2024,10:27 PM IST

சென்னை:   கன மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.


தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. பல ஊர்களில் இப்போதே வெள்ளம் ஏற்படும் அளவுக்கு கன மழை பெய்துள்ளது. இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட 9 வட மாவட்டங்களுக்கு நாளை முதல் நான்கு நாட்களுக்கு மிக கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.




அதிலும் 16ம் தேதி அதீத  கன மழைக்கான ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனைகள் நடத்தினார். இந்த ஆலோசனையின்போது அதிகாரிகளுக்கு அவர் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தார்.


அதேபோல பொதுமக்களுக்கும் சில அறிவுறுத்தல்களை அவர் வழங்கினார். அந்த அறிவுறுத்தல்கள்:


- விவசாயிகள், மீனவர்கள், நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகன உரிமையாளர்கள், விடுதிகளில் தங்கி இருப்பவர்கள், பயணங்களை திட்டமிட்டுள்ளவர்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள், தொழிற்பேட்டைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டுமான பணியை மேற்கொள்பவர்கள் கனமழைக்கான திட்டமிடுதலையும் முன்னேற்பாடுகளையும் செய்து கொள்ள வேண்டும்.


- தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின்படி மு முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும்.


- முக்கிய பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகார் வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.


- கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு பொதுமக்கள் கடற்கரை சுற்றுலாத்தலங்கள் வழிபாட்டுத் தலங்கள் நீர்நிலைகள் ஆகிய பகுதிகளில் கூட வேண்டாம்.


- அறுந்து கிடக்கும் மின் கம்பிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நயினார் நாகேந்திரனை தனியாக சந்தித்தது ஏன்.. வதந்தி கிளப்பக் கூடாது.. எஸ்.பி. வேலுமணி ஆவேசம்!

news

வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?

news

Wayanad by poll resutls.. அபார வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி.. 3.20 லட்சம் வாக்குகள் வித்தியாசம்!

news

தவெக மாநாட்டுக்கு நிலம் தந்த விவசாயிகள்.. விருந்து வைத்த விஜய்.. வாசலில் வரவேற்ற புஸ்ஸி ஆனந்த்!

news

Maharashtra poll results: உத்தவ், சரத் பவாருக்கு கெட் அவுட் சொன்ன ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார்!

news

தொடர் உயர்வில் தங்கம்... சவரன் ரூ.58,000த்தை கடந்தது.. திகைப்பில் மக்கள்

news

Wayanad: வயநாட்டில் கொடி நாட்டிய பிரியங்கா காந்தி.. 4வது தலைமுறையிலிருந்து மேலும் ஒரு எம்.பி

news

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி

news

சனாதன சக்திகளை ஓங்க விட்டு விடாதீர்கள்.. திரைத்துறையினருக்கு திருமாவளவன் கோரிக்கை

அதிகம் பார்க்கும் செய்திகள்