கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தென்பெண்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை நேரில் சென்று ஆய்வு சென்ற அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வத்திடம் முதல்வர் மு க ஸ்டாலின் வீடியோ கால் மூலம் மழை பாதிப்புகளை கேட்டு அறிந்தார். பாதிக்கப்பட்டவர்களுடனும் அவர் பேசினார். தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஃபெஞ்சல் புயல் எதிரொலியால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் பாதிப்பை சந்தித்துள்ளன. பல ஊர்களில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தி விட்டது இந்த புயல். புயல் கடந்த சனிக்கிழமை புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இருப்பினும் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, நீலகிரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக கன மழை பெய்து ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஊரெல்லாம் வெள்ளக்காடாகியுள்ளது. தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 1.6 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் அங்குள்ள மூங்கில் துறை பட்டு அண்ணா நகர் பகுதி முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் இரு கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் புகுந்து பல்வேறு பகுதிகள் சேதம் ஆகின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் சேதமான பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் வெளியேறி முகாம்களில் தங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அப்போது வீடியோ காலில் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வத்தை தொடர்பு கொண்டு முதல்வர் மு க ஸ்டாலின் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டார். அப்போது பாதிக்கப்பட்ட பொதுமக்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் முதல்வர் கேட்டறிந்தார்.
விழுப்புரம் மழை:
ஃபெஞ்சல் புயலின் ருத்ர தாண்டவத்தால் கன மழை விழுப்புரம் மாவட்டத்தையே புரட்டி போட்டது. கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 51 சென்டிமீட்டர் மழை பதிவானது. இந்தப் மழை வெள்ளத்தால் விழுப்புரம் மாவட்டமே ஸ்தம்பித்தது. குறிப்பாக முக்கிய சாலைகள், பஸ் நிலையம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து ஆறு போல் ஓடியது.
இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதேபோல் பொன் அண்ணாமலை நகரில் 500 மேற்பட்ட குடியிருப்புக்குள் மழை நீர் புகுந்து மக்கள் அவஸ்தையுற்றனர்.
இதனால் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி, சிவசங்கர் ஆகியோர் விழுப்புரம் மாவட்டத்தில் முகாமிட்டு கள ஆய்வுப் பணிகளை தீவிரப்படுத்தினர். இதனிடையே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று விழுப்புரம் மரக்காணம் பகுதிகளில் வசிக்கும் மக்களை நேரில் சென்று நிவாரண பொருட்களை வழங்கினார்.
மரக்காணம் முதல் விழுப்புரம் வரை
இந்த நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தார். முன்னதாக சென்னையிலிருந்து புறப்பட்ட முதல்வர் மரக்காணம் பகுதியில் உள்ள புயல் மையத்தை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து விக்கிரவாண்டியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று பார்வையிட்டு, அவர்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்தார். பின்னர் அவர்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக்.. திடீரென கைது செய்யப்பட்டது ஏன்?.. திடுக்கிடும் தகவல்கள்!
Pushpa 2.. விஜய் ஷாருக்கானை முந்திய அல்லு அர்ஜூன்.. ஆத்தாடி புஷ்பா 2 சம்பளம் இவ்வளவா??!
சம்பல் செல்ல முயற்சித்த ராகுல் காந்தி.. தடை போட்ட உ.பி. போலீஸ்.. டெல்லிக்கே திரும்பினார்!
புயல் பாதித்த மாவட்டங்களில்.. ஜனவரிக்குத் தள்ளிப் போகும் அரையாண்டு தேர்வு.. அமைச்சர் அன்பில் மகேஷ்
வங்கி கணக்கிற்கு இனி 4 பேர் வரை நாமினியாக நியமிக்கலாம் .. புதிய சட்ட மசோதா நிறைவேற்றம்
மகாராஷ்டிராவின் புதிய முதல்வராகிறார் பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ்.. டிச. 5ல் பதவியேற்பு
Chennai Lakes: தொடர் மழையால் மேம்பட்ட சென்னை ஏரிகளின் நீர் இருப்பு.. சூப்பர் அப்டேட்!
அவசர சோறு ஆபத்து.. விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு.. உணவுப் பழக்கம் பழமொழி வடிவில்!
Karthigai Maha Deepam 2024: கொடியேற்றத்துடன்.. திருவண்ணாமலையில் தொடங்கியது திருக்கார்த்திகை விழா!
{{comments.comment}}