சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் மேற்கொள்ளப்படும் 98.21 கோடி ரூபாய் மதிப்பிலான ஆறு திட்டப்பணிகளை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று துவங்கி வைத்தார். அதே சமயம் முடிவுற்ற திட்டங்களான 426 கோடியே 32 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 3268 அடுக்குமாடி குடியிருப்பு கட்டங்களையும், 156 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களையும் காணொளி வாயிலாக திறந்து வைத்தார் முதல்வர் மு க ஸ்டாலின்.
திமுக பொறுப்பேற்றதிலிருந்து தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில் நான் முதல்வன் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டங்களையும் திறந்து வைத்தார்.
அந்த அடிப்படையில் உயர் கல்வித் துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் புதிய வகுப்பறைகள், ஆய்வக கட்டடங்கள், கலையரங்க விடுதிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான கட்டடங்கள், போன்றவை சென்னை திருநெல்வேலி மதுரை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ளன. உயர் கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ளன.இந்த கட்டிடங்கள் ரூபாய் 156 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
அதேபோல் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பல்வேறு வசதிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ரூபாய் 426 கோடியே 32 லட்சம் செலவில் 3268 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ரூபாய் 426 புள்ளி 32 கோடி செலவில் கட்டப்பட்ட 3,268 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும், 156 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய கல்விசார் கட்டிடங்களையும் முதல்வர் மு க ஸ்டாலின் இன்று காணொளி வாயிலாக திறந்து வைத்தார். அதே சமயத்தில் சென்னையில் சி எம் டி ஏ மேற்கொள்ளப்படும் 98.21 கோடி மதிப்பிலான ஆறு திட்டப் பணிகளை இன்று துவக்கி வைத்தார்.
இதில் பெரும்பாக்கம் ஏரிக்கரையை மேம்படுத்தும் பணிக்காக ரூபாய் 23.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் முடிச்சூர் ஏரிக்கரையை மேம்படுத்த ரூபாய் 20.61 கோடியும், அயனம்பாக்கம் ஏரிக்கரையை மேம்படுத்த ரூபாய் 20.45 கோடியும், வேளச்சேரி ஏரிக்கரையை மேம்படுத்த ரூபாய் 19.42 கோடியும், சிக்கனான் ஏரிக்கரையை மேம்படுத்த ரூபாய் 9.60 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர ரூபாய் 4.50 கோடி மதிப்பீட்டில் வேளச்சேரி மேம்பாலத்தின் கீழ் அலகு படுத்தல் பணிக்காகவும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}