சென்னை: தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா கவின் கலை பல்கலைக்கழகம் சார்பில் பிரபல பாடகி பி. சுசீலாவுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கெளரவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியில் பேசும்போது பி.சுசீலா பாடிய பாடலைப் பாடி அனைவரையும் நெகிழ வைத்தார்.
1935ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர் பாடகி பி.சுசீலா. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பன்மொழிகளில் ஏறக்குறைய 40 ஆண்டுகளில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியவர் பி.சுசீலா. தென்னிந்தியாவின் இசைக்குயில், மெல்லிசை அரசி, இசையரசி, கான கோகிலா, கான சரஸ்வதி என்றும் அழைக்கப்படுபவர்.
கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற இவருக்கு ஏற்கனவே பத்மபூஷண் விருது, ஐந்து முறை தேசிய விருது, மூன்று முறை தமிழக அரசு விருது என ஏராளமான விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவருக்கு தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் சார்பில் கெளரவ டாக்டர் பட்டம் அளிக்க்பட்டுள்ளது.
இப்பல்கலைக்கழகத்தின் இரண்டாம் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். விழாவில் பிரபல பின்னணி பாடகி பி. சுசீலாவுக்கு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் சார்பில் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் பாடகி பி. சுசீலாவின் இருக்கைக்கே சென்று மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கி கெளரவித்தார். பின்னர் நிகழ்ச்சியில் முதல்வர் பேசும்போது பி.சுசீலாவைப் புகழ்ந்து பேசினார். மேலும் பி.சுசீலா பாடிய நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை என்ற பாடலின் சில வரிகளைப் பாடி மகிழ்ந்தார். அவரது பாடலைக் கேட்டு பி.சுசீலாவும் புன்னகை மற்றும் ஆச்சரியத்துடன் முதல்வரைப் பார்த்து மகிழ்ந்தார்.
ஜெயலலிதாவைப் பாராட்டிய மு.க. ஸ்டாலின்
முதல்வர் தனது பேச்சின்போது இந்த பல்கலைக்கழகத்தை நிறுவியவரான மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையும் பாராட்டிப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர்தான் வேந்தராக இருக்கிறார். ஆனால் இந்த இசைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்வர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வரே வேந்தராக இருக்க வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தவரும் ஜெயலலிதாதான் என்பதால்தான் இன்று பேசும்போது அவரை பாராட்டிப் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.
Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்
Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?
மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்
தங்கம் விலை விடாமல் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது ஏன்.. நிபுணர்கள் தரும் விளக்கம் இதுதான்!
கிண்டி அரசு மருத்துவமனை டாக்டரைக் கத்தியால் குத்திய விக்னேஷுக்கு.. ஜாமீன் மறுப்பு!
TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!
AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!
Lunch box recipe: கோவக்காய் வேர்க்கடலை பொறியல்.. ஒரு விசில்.. ஒரு பொறியல்.. ஓஹோ டேஸ்ட்!
Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?
{{comments.comment}}