சென்னை: இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ தலைவராக உள்ள சோம்நாத் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து புதிய தலைவராக வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். கன்னியாகுமரிதான் அவர் பிறந்த மாவட்டம். இதற்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவன் இஸ்ரோ தலைவராக இருந்துள்ளார். அதன் பின்னர் கேரளாவைச் சேர்ந்த சோம்நாத் தலைவராக பதவி வகித்து வந்தார். தற்போது அவரது பதவிக்காலம் முடியும் நிலையில் புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி.நாராயணன் இப்பதவிக்கு வந்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில்,
இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி. நாராயணன் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கும் செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் உளம்நிறைந்த வாழ்த்துகள்.
தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, உதவியாளர் நிலையில்
இஸ்ரோவில் -வில் பணிக்குச் சேர்ந்த நாராயணன் அவர்கள் இன்று அதன் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்திருக்கிறார் எனில், அதன் பின் எத்தகைய ஆர்வமும், கடின உழைப்பும் இருக்கும் என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.
#Chandrayaan2, #Chandrayaan3, #AdityaL1, #Gaganyaan என உலக அரங்கில் இந்தியாவின் பெருமைக்குக் காரணமான பல விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் பங்களித்த - தொடர்ந்து பங்களித்து வரும் #Narayanan அவர்களின் தலைமையில் #ISRO உறுதியாகப் புதிய உயரங்களைத் தொடும்! நாராயணன் அவர்களின் பயணம் அவரைப் போல மேலும் பல தமிழ்நாட்டு மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாக ஊக்கமளிக்கும் என்று கூறியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
தேசியவாதியான ஐயா குமரி ஆனந்தன் மறைவு தமிழகத்துக்கும் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு: அண்ணாமலை
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பா..? வானிலை மையம் விளக்கம்!
நீட் எதிர்ப்பு என்பது... முதல்வர் ஆடும் சுயநல நாடகம்: பாஜக தலைவர் அண்ணாமலை!
இரத்தக்களறி (சிறுகதை)
4 நாட்களுக்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... சவரனுக்கு ரூ.520 உயர்வு!
நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்.. குமரி அனந்தன் குறித்து டாக்டர் தமிழிசை உருக்கம்!
இலக்கியச் செல்வர்.. காங்கிரஸ் மூத்த தலைவர்.. காமராஜரின் சிஷ்யர்.. மறைந்தார் குமரி அனந்தன்!
மதுரை குலுங்க.. வைகை ஆற்றில் கள்ளழகர்.. வந்திறங்க போறாரு.. வெளியானது தேதி!
{{comments.comment}}