அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

Apr 18, 2025,05:44 PM IST

சென்னை: முதல்வர் மு. க ஸ்டாலின் தலைமையில், நேற்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்கள் செயல்படக்கூடாது என  அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.



2025 -26 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் இம்மாத இறுதியில் 29ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கிடையே பேரவையில் துறை ரீதியான  மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு துறை ரீதியாக பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அதே சமயத்தில் மத்திய- மாநில அரசுகளுக்கு இடையேயான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக முதல்வர் 

 மு.க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என  அறிவிக்கப்பட்டிருந்தது.




அதன்படி,நேற்று முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் மாலை 6.30 மணிக்கு தொடங்கியது. தமிழகம் அடுத்த கட்டத்தை நோக்கி வளர்ச்சியடைய வேண்டுமென்ற நோக்கில்  தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் முக்கிய இலக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் விண்வெளி துறையில் பத்தாயிரம் கோடி

முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் குறைந்தபட்சம் 10,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் விண்வெளித் துறையில் தகுதியானவர்களை ஊக்குவித்தல், 300 கோடிக்கு மேலான முதலீடுகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டங்கள் அனைத்தையும் அமைச்சரவையில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஒப்புதல் வழங்கினார்.


இதனைத் தொடர்ந்து ஏற்கனவே அமைச்சர்கள் பொன்முடி மற்றும் துரைமுருகன் ஆகியோர் பேச்சுக்கு ஏற்கனவே பல்வேறு  சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதற்கு எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தது. இந்த நிலையில் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்கள் செயல்பட கூடாது என அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Chennai AC EMU Train service.. தொடங்கியது ஏசி புறநகர் ரயில் சேவை.. கட்டணம் தான் ஜாஸ்தி!

news

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.. துரை வைகோ அறிவிப்பு

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

news

மகள், கணவரின் Mental Torture.. வருங்கால மருமகனுடன் எஸ்கேப் ஆன மாமியார்.. திரும்பி வந்ததும் டிவிஸ்ட்!

news

வேண்டியதை நடத்தித் தரும் அபிஜித் நேரம்.. அற்புதமான அந்த 24 நிமிடங்கள்!

news

பாபா வங்கா சொன்னது நடக்கப் போகிறதா?.. திக் திக் பரபரப்பு எதிர்பார்ப்புடன் உலக நாடுகள்!

news

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பா?.. திட்டவட்டமாக மறுத்தது மத்திய அரசு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 19, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

தங்கம் விலையில் மாற்றமில்லை.... நேற்றைய விலையே இன்றும் தொடர்கிறது!

அதிகம் பார்க்கும் செய்திகள்